உலகம்

உலகம் முழுதும் கோவிட்-19 தொற்றுக்கள் 4 கோடியை விரைந்து நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பாவில் இதன் 2 ஆம் அலைத் தாக்கம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகள் கோவிட்-19 தொற்றின் 2 ஆவது அலையை எதிர் கொள்ள மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதனால் கோவிட் -19 தொற்றுக்கள் அதிகம் ஏற்பட்டுள்ள பல ஐரோப்பிய நகரங்கள் அல்லது மாகாணங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டும் வருகின்றன.

பிரான்ஸில் சமீப நாட்களாக அதிகளவு கொரோனா தொற்றுக்கள் பதியப் பட்டு வருகின்றன. கடந்த தினம் மாத்திரம் புதிதாக 30 621 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனால் பிரான்ஸில் மொத்த கோவிட்-19 தொற்றுக்கள் 809 684 ஆக உயர்ந்துள்ளது. கடந்த தினம் மாத்திரம் பிரான்ஸில் 88 பேர் கொரோனாவுக்குப் பலியான நிலையில், அங்கு மொத்த பலி எண்ணிக்கை 33 125 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பிரான்ஸில் சனிக்கிழமை முதல் தொடர்ந்து 30 நாட்களுக்கு அவசர நிலையைப் பிரகடனப் படுத்துவதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் தலைநகர் பாரிஸ் உட்பட பிரான்ஸின் முக்கிய 8 நகரங்களில், இரவு 9 மணி முதல் அதிகாலை வரை இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து 4 வாரங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஜோ பிடெனுடன் விமானத்தில் ஒன்றாகப் பயணம் செய்த ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து ஜோ பிடெனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லையென நெகட்டிவ் முடிவு வந்திருப்பதாகவும், அவர் தனிமையில் இருக்கத் தேவையில்லை என்றும் தனது பணிகளைத் தொடரலாம் என்றும் கூடத் தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை உலகளாவிய கொரோனா பெரும் தொற்றின் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்திருந்தது. கோவிட்-19 அச்சுறுத்தல் தொடர்ந்து தீவிரமாகவே இருந்து வரும் நிலையில், தமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பல நாடுகள் இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது எதிர்வரும் ஆண்டுகளில் அமெரிக்காவை விட அதிகமாக இருக்கும் என்றும் புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச நாணய நிதியமான IMF இன் தரவுகளைப் பயன்படுத்தி புளூம்பர்க் மேற்கொண்ட கணக்கீடுகளின் படி இத்தகவல் வெளியாகி உள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 39 613 432
மொத்த இறப்புக்கள் : 1 109 571
குணமடைந்தவர்கள் : 29 670 960
ஆக்டிவ் தொற்றுக்கள் : 8 832 901
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 71 483

நாடளாவிய புள்ளி விபரம் (முக்கியமான நாடுகள் மட்டும்..) :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 8 288 278 : மொத்த இறப்புக்கள் : 223 644
இந்தியா : 7 432 680 : 113 032
பிரேசில் : 5 201 570 : 153 229
ரஷ்யா : 1 384 235 : 24 002
ஸ்பெயின் : 982 723 : 33 775
ஆர்ஜெண்டினா : 965 609 : 25 723
கொலம்பியா : 945 354 : 28 616
பெரு : 862 417 : 33 648
மெக்ஸிக்கோ : 841 661 : 85 704
பிரான்ஸ் : 834 770 : 33 303
தென்னாப்பிரிக்கா : 700 203 : 18 370
பிரிட்டன் : 689 257 : 43 429
ஈரான் : 522 387 : 29 870
இத்தாலி : 391 611 : 36 427
பங்களாதேஷ் : 386 086 : 5623
ஜேர்மனி : 356 792 : 9836
பாகிஸ்தான் : 322 452 : 6638
கனடா : 194 106 : 9722
ஜப்பான் : 91 431 : 1650
சீனா : 85 659 : 4634
சுவிட்சர்லாந்து : 74 422 : 2122
இலங்கை : 5354 : 13

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 3 கோடியே 96 இலட்சத்து 13 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 11 இலட்சத்து 9 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றைப் போன்றே சுவிட்சர்லாந்திலும், இலங்கையிலும் தொற்றுக்கள் மிகவும் அதிகரித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் மொத்த தொற்றுக்கள் 74 ஆயிரத்து 422 ஆகவும், இலங்கையில் 5354 ஆகவும் உள்ளன.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.