உலகம்

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள குஜ்ரன்வாலா நகரில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மிகப் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை அந்நாட்டு எதிர்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து முன்னெடுத்துள்ளன.

இதில் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஜமைத் உலேமா இ இஸ்லாம் கட்சிகள் போன்றவை பங்கேற்றன.

நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸும் இதில் கலந்து கொண்டார். இந்தப் பேரணியைத் தடுத்து நிறுத்த ஆளும் கட்சியும், பாகிஸ்தான் போலிசாரும் சாலைகளில் தடுப்புக்களை வைத்திருந்த போதும் அவற்றை நீக்கி விட்டு பேரணி நடத்தப் பட்டது. இந்தப் பேரணியில் முக்கியமாக பாகிஸ்தான் மக்களது வாக்குரிமை முறையாக அளிக்கப் பட வேண்டும் என்பதும் மேற்கத்தேய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதும் வலியுறுத்தப் பட்டது. மேலும் இந்தப் பேரணியில் காணொளி வாயிலாக முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார்.

இதன் போது அவர் இம்ரான் கான் பாகிஸ்தானுக்குத் தகுதியில்லாத தலைவர் என்றும், இவரை ஆட்சியில் அமர்த்திய இராணுவத்தின் ஜெனரல் பஜ்வா தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 'நீங்கள் என்னைத் துரோகி என்று கூறினாலும், என் மீது பொய்யான வழக்குகளை சுமத்தினாலும், நான் தொடர்ந்து மக்கள் நலனுக்காவே பேசுவேன். இம்ரான் கானின் தவறுகளை சுட்டிக் காட்ட ஒரு போதும் அஞ்ச மாட்டேன். உண்மையில் இம்ரான் கானைக் கொண்டு பாகிஸ்தான் இராணுவமும், ஐ எஸ் ஐ உம் தான் பொம்மை ஆட்சியை நடத்துகின்றன.' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசு மற்றும் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான பேரணிகள் மேலும் ஆக்டோபர் 18 கராச்சியிலும், 25 ஆம் திகதி குவெட்டாவிலும், நவம்பர் 22 ஆம் திகதி பெஷாவரிலும், நவம்பர் 30 ஆம் திகதி முல்தானிலும், டிசம்பர் 13 ஆம் திகதி லாகூரிலும் நடைபெறத் திட்டமிடப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.