உலகம்

பிராந்திய அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பாக அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே எட்டப்பட்டிருக்கும் இறுதி ஒப்பந்தத்தினை மீட்டெடுப்பது தொடர்பான மும்மொழிவுக்கு அமெரிக்கா வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது.

New Start என்ற இந்த ஒப்பந்தத்தை எந்த வித நிபந்தனைகளும் இன்றி மீண்டும் விரிவாக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அழைப்பு விடுத்தார்.

இதனை நிராகரித்த வெள்ளை மாளிகை குறித்த ஒப்பந்தம் மீண்டும் அதே நிலையில் பரீசிலிக்கப் பட முடியாத ஒன்று எனத் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபெர்ட் ஓ பிரியென் கருத்துத் தெரிவிக்கும் போது, இன்னுமொரு முறை இவ்விரு வல்லரசுகளுக்கும் இடையே மிகுந்த பணச் செலவு மிக்க ஆயுதப் போட்டி ஏற்படுவதைத் தவிர்ப்பது தொடர்பில் ரஷ்யர்கள் தமது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றுள்ளார். மேலும் முன்பு எட்டப் பட்ட ஒப்பந்தம் கைவிடப் பட்டால் ரஷ்ய தரப்பில் மீண்டும் அணுவாயுதப் படைகள் கட்டி எழுப்பப் படக்கூடும் என அமெரிக்கா கருதினாலும், பழமையான அணுவாயுதங்களுக்கு மாற்றீடாகப் புதிய அணுவாயுதங்களுக்கு பெண்டகனும் பெருமளவு பணம் செலவிட்டே வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 ஆவது அதிபர் தேர்தலுக்காகத் தனது வெளியுறவுக் கொள்கைகளை விருத்தி செய்வதில் முனைப்புக் காட்டி வருகின்றார். மேலும் கடந்த வருடம் இந்த New Start என்ற ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு குறைபாடும், சாதகமற்றதும் ஒன்று என ரஷ்யாவுடன் தனிப்பட்ட ஆயுத ஒப்பந்தம் ஒன்றிலிருந்து அமெரிக்கா வெளியேறிய போது டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த வருடம் இன்னமும் ரஷ்யாவுடன் இதே New Start ஒப்பந்தத்தின் வருங்கால வடிவம் குறித்து ரஷ்யர்களுடன் கலந்தாலோசிக்க டிரம்ப் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நவம்பர் 3 அதிபர் தேர்தலின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடென் இந்த New Start ஒப்பந்தத்தை அதே வடிவில் 5 வருடம் நீடிப்பதற்கு புதின் விடுத்த அழைப்பினைத் தான் ஒப்புக் கொள்ளத் தயங்க மாட்டேன் என்றுள்ளார். முன்னால் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் இந்த New Start ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு செனட்டினால் அங்கீகரிக்கப் பட்ட தருணத்தில் ஜோ பிடென் துணை அதிபராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.