உலகம்

இந்தியாவின் பிரபல மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுரேஷ் ஜாதவ் சமீபத்தில் நடைபெற்ற தடுப்பூசிக்கான மின் உச்சி மாநாடு ஒன்றில் கருத்துத் தெரிவிக்கும் போது, டிசம்பருக்குள் இந்தியாவுக்கு கோவிஷீல்ட் என்ற ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 60 முதல் 70 டோசேஜ்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றுள்ளார்.

ஆனால் இதற்கு உரிமம் கிடைத்த பின்னர் 2021 ஆமாண்டே சந்தைக்கு வரும் என்றும் டாக்டர் ஜாதவ் தெரிவித்துள்ளார். தற்போது இந்தத் தடுப்பு மருந்தின் 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்டப் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த சோதனைகள் பலனளிக்கும் போது இந்தியாவுக்காக குறித்த SII நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 700-800 மில்லியன் தடுப்பூசியினைத் தயாரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும், செப்டம்பர் 16 ஆம் திகதி DCGI எனப்படும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவு இம்மருந்தின் 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்க அனுமதித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ நிறுவனங்களின் பங்களிப்புடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் - ஆஸ்ட்ரா ஜெனெகா இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியின் இறுதிக் கட்ட சோதனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப் பட்டால் அது தமது தேசத்தின் அனைத்து மக்களுக்கும் கிடைக்க உறுதியான ஏற்பாடுகள் செய்யப் பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் திகதி தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், அங்கு கடுமையான கோவிட்- 19 பாதிப்புக்கு மத்தியிலும், தேர்தல் பிரச்சாரம் மிகவும் சூடு பிடித்துள்ளது. சனிக்கிழமை டெட்ராய்ட் நகரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடென் மேற்கொண்ட போது, அமெரிக்காவில் 2 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்களுக்கு அதிபர் டிரம்பே காரணம் என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் தற்போது நடக்கும் இனப்பிரச்சினைக்குத் தேவையான தீர்வைக் காண்பேன் என்றும் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மறுபுறம் அதிபர் டிரம்போ தேர்தலில் தான் ஒருவேளை தோல்வி அடைந்தால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்றும் தனது சமீபத்திய பிரச்சாரம் ஒன்றில் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை முன்னால் அமெரிக்க அதிபர் ஒபாமா ஜனநாயகக் கட்சியின், ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக அடுத்த வாரம் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 39 981 957
மொத்த இறப்புக்கள் : 1 114 935
குணமடைந்தவர்கள் : 29 911 853
ஆக்டிவ் தொற்றுக்கள் : 8 955 169
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 71 920

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 8 343 140 : மொத்த இறப்புக்கள் : 224 283
இந்தியா : 7 494 551 : 114 064
பிரேசில் : 5 224 362 : 153 690
ரஷ்யா : 1 399 334 : 24 187
ஸ்பெயின் : 982 723 : 33 775
ஆர்ஜெண்டினா : 979 119 : 26 107
கொலம்பியா : 952 371 : 28 803
பிரான்ஸ் : 867 197 : 33 392
பெரு : 865 549 : 33 702
மெக்ஸிக்கோ : 847 108 : 86 059
பிரிட்டன் : 705 428 : 43 579
தென்னாப்பிரிக்கா : 702 131 : 18 408
ஈரான் : 526 490 : 30 123
பங்களாதேஷ் : 387 295 : 5646
ஜேர்மனி : 361 733 : 9853
இந்தோனேசியா : 357 762 : 12 431
பாகிஸ்தான் : 323 019 : 6654
கனடா : 196 321 : 9746
சீனா : 85 672 : 4634
சுவிட்சர்லாந்து : 74 422 : 2122
இலங்கை : 5475 : 13

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளாவிய அடிப்படையில் மொத்த தொற்றுக்கள் 3 கோடியே 99 இலட்சத்து 81 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 11 இலட்சத்து 14 ஆயிரத்து 935 இற்கும் அதிகமாகவும் உள்ளன. நாளைய தினம் உலகளாவிய மொத்த தொற்றுக்கள் 4 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கையில் தொற்றுக்கள் சமீப நாட்களாகத் திடீரென அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.