உலகம்

சமீபத்தில் நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றதை அடுத்து அவர் 2 ஆவது முறையாகவும் பிரதமராகியுள்ளார்.

இந்த வருடத் தொடக்கத்தில் கொரோனா பெரும் தொற்று உலகை ஆக்கிரமித்த போது மிகவும் சாமர்த்தியமாக திட்டமிட்டு செயற்பட்டு அதன் தாக்கத்தையும், அதிகளவு உயிர்ப் பலிகளையும் தடுத்தவர் ஜெசிந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் ஏற்பட்ட இன்னொரு வரலாற்று சாதனையாக ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் விதத்தில் வெற்றி பெற்றதும் அமைந்துள்ளது. ஜெசிந்தாவின் முதல் பதவிக் காலத்தின் போது அவர் தேசியவாதக் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தி வந்ததால் அவரால் பல முற்போக்கு சீர்திருத்தங்களை திறம்பட செய்ய இயலவில்லை. ஆனாலும் கொரோனா பெரும் தொற்றை மிகத் திறமையாக சமாளித்த அவருக்கு, இந்த முறை இச்சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

தனது வெற்றிக்குப் பின் மக்களிடம் ஜெசிந்தா பேசிய போது, 'கடந்த 50 ஆண்டுகளில் எந்தக் கட்சிக்கும் இல்லாத ஆதரவைத் தமது கட்சிக்கு அளித்ததற்கு நன்றி தெரிவித்ததுடன் இது மிகப் பெரும் கௌரவம் என்றும், இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம் என்றும், அனைவருக்கும் ஏற்ற ஆட்சியை வழங்குவோம் என்றும் உறுதி அளிக்கின்றேன்..' என்று தெரிவித்தார்.

தமக்கு கிடைத்த வெற்றியை தொழிலாளர் கட்சியினர் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஜெசிந்தாவின் கட்சிக்கு 49% வீத வாக்குகளும், தேசியவாதக் கட்சிக்கு 27% வீத வாக்குகளும் கிடைத்திருந்தன. தற்போது பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ உட்பட உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.