உலகம்

சீன தென்கிழக்குக் கடற்பரப்பில் சீனா தனது இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மிகவும் அதிகரித்து வருவதாகவும், இதனால் தாய்வான் மீது சாத்தியமான இராணுவ முற்றுகை ஒன்றுக்கு சீனா தயாராகி வருவதாகவும், South China Morning Post பத்திரிகையின் சமீபத்திய பதிப்பில் பாதுகாப்புக் கண்காணிப்பாளர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் சீனா தனது அதி நவீன DF-17 ரக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை நிறுத்தி வருவதாகவும் கூடக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை ஏவுகணையானது மிக நீண்ட வீச்சும், மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறனை உடையதும் ஆகும். சீனாவின் ஆளும் கட்சியினால் தாய்வானானது கட்டுப் படுத்தப் படவில்லை என்ற போதும், சுய அரசாங்கம் மூலம் செயற்பட்டு வரும் குறித்த தீவானது தமது சீன தேசத்துக்கு உட்பட்ட பகுதி என நீண்ட காலமாக சீனா கூறி வருகின்றது. ஆனாலும் ஒரு இராணுவ முற்றுகை மூலம் இதனைக் கைப்பற்ற முயல மாட்டோம் என்றே சீன அதிபர் ஜின்பிங் ஒருமுறை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சீனப் பிரதமர் தென் மாகாணமான குவாங்டொங்க் இற்கு விஜயமளித்த போது அங்கு ஏற்கனவே அதிகரிக்கப் பட்டிருந்த துருப்புக்களை எந்த நேரமும் யுத்தத்துக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியதாக சீனாவின் சின்ஹுவா செய்தி ஊடகம் தெரிவித்திருந்தது.

இது தவிர கடந்த சில வருடங்களாகவே தாய்வானை சுற்றி சீனா தனது இராணுவப் பயிற்சியினை அதிகரித்து வந்துள்ளது. செப்டம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் கிட்டத்தட்ட 40 சீன யுத்த விமானங்கள் தாய்வான் வான் பரப்பினூடாகப் பறந்துள்ளன. இதனை ஒரு வல்லாதிக்க அச்சுறுத்தல் என்று தாய்வான் அதிபர் ட்சாய் இங் வென் தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.