உலகம்

சுவிற்சர்லாந்தில் கடந்த வாரம் முதல் புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் குறைந்து வருவதாக, சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் கருதுகிறார்.

கடுமையான வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான ஜூரா தலைநகருக்குச் சென்றிருந்த கூட்டாட்சி உறுப்பினர் , கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் கூட்டமைப்புக்கும் ஜூரா மாநிலத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு சிறந்தது என்று விவரித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர், "ஜூரா மட்டுமன்றி நாடு முழுவதும் நிலைமை தீவிரமாக உள்ளது. இது முழு நாட்டிற்கும் ஒரு கடினமான நேரம். மருத்துவமனைகளில் நிலைமை மிகவும் கவலைக்குரியது. இரண்டாவது அலையில் ஊழியர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள், சில உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் கூட உள்ளனர். விரைவான சோதனைகள் இப்போது வருகின்றன. அவற்றை யார் பயன்படுத்தலாம் என்பதை மாநிலங்கள் தீர்மானிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ள எவரும் உடனடியாக பரிசோதிக்கப்பட்டு முடிவுகளைப் பார்க்க வேண்டும், அதாவது தனிமைப்படுத்தலுக்குச் செல்வது " என்று கூறினார்.

சுவிஸ் மத்திய கூட்டாட்சி சுகாதார அலுவலக (FOPH) இன் இன்றைய தகவல்களின் படி,கடந்த 24 மணி நேரத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனில் 5980 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 107 ல் இறப்புகளும் 243 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தொற்று வீதம் கனிசமாகக் குறைந்தும், இறப்பு வீதம் சற்று அதிகரித்துள்ளதை இப் புள்ளி விபரங்கள் காண்பிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.