உலகம்

அமெரிக்காவின் Pfizer நிறுவனமும் அதன் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த BioNtech SE என்ற பங்கு நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் கோவிட்-19 இற்கு எதிரான தடுப்பு மருந்து 90% வீதம் வினைத் திறன் மிக்கது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

2019 இறுதியில் தோன்றி இன்று வரை உலகை மோசமாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் 5 கோடியைத் தாண்டியும், உயிரிழப்புக்கள் 1 மில்லியனைத் தாண்டியும் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு மனித உயிர்களைக் காப்பதிலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் முக்கிய வெற்றியாகக் கருதப் படுகின்றது.

இந்தத் தடுப்பு மருந்து மிக மோசமான எந்தவொரு பக்க விளைவையும் ஏற்படுத்தாத காரணத்தினால் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்ட 16 தொடக்கம் 85 வயதுக்குட்பட்ட எவருக்கும் அவசர பாவனைக்கு வழங்க முடியும். இந்நிலையில் அமெரிக்க சுகாதார அதிகாரப் பிரிவின் அனுமதிக்கு இவ்விரு கம்பனிகளும் விண்ணப்பித்துள்ளன என்றும் தெரிய வருகின்றது. ஏற்கனவே பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் அஸ்ட்ரா செனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் தடுப்பு மருந்து உட்பட சில தடுப்பு மருந்து பரிசோதனைகளின் இறுதிக் கட்ட சோதனை முன்னேற்றகரமாக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் Pfizer நிறுவனம் தனது தடுப்பு மருந்து சோதனைக்காக செலுத்தப் பட்ட 44 000 தன்னார்வலர்களிடமும் இருந்து முழுமையான தரவுகளைப் பெற 2 மாதம் தேவை என்ற நிலையில் இந்த நவம்பர் மாத இறுதியில் முடிவுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. Pfizer நிறுவனத்தின் அறிவிப்பை அடுத்து அமெரிக்க பங்கு சந்தைகள் சிலவற்றில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் Pfizer நிறுவனம் தனது மருத்துவ ஆராய்ச்சியைத் தொடங்கியிருந்த போது அமெரிக்க அரசுடன் $1.95 பில்லியன் டாலர்களுக்கு சுமார் 100 மில்லியன் டோசேஜ் வழங்குவதாக ஒப்பந்தம் செய்திருந்தது. இது தவிர இந்த நிறுவனத்துடன் ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் ஒப்பந்தங்களைத் தற்போது ஏற்படுத்தியுள்ளன.

மேலும் 2021 ஆமாண்டு சுமார் 1.3 பில்லியன் டோஸேஜ் தடுப்பு மருந்து தயாரிக்கும் திட்டத்திலுள்ளதாகவும் Pfizer அறிவித்துள்ளது. BNT162b2 என்று பெயரிடப் பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்தானது 3 கிழமைக்குள் ஒருவருக்கு இரு டோசேஜ்கள் வழங்கப் பட வேண்டும். மைனஸ் 80 பாகை செல்சியஸ் அதாவது அதீத குளிர் நிலையில் தான் இந்த மருந்து சேமிக்கப் பட்டு கொண்டு செல்லப் பட வேண்டும் என்பது சவாலான ஒரு விடயமாகும்.

இந்தத் தடுப்பு மருந்து மெசெஞ்சர் ஆர் என் ஏ (mRNA) என்ற டி என் ஏ கூறை அடிப்படையாகக் கொண்டு கோவிட்-19 வைரஸின் மேற்புறத்தில் ஸ்பைக் புரோட்டீனை வேறு விதமாக என்கோடிங் செய்யும் விதத்தில் தயாரிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இதே வைரஸின் புரோட்டினை கொண்டு அதன் தொற்றைத் தடுக்கும் விதத்தில் எமது நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரித்து விடும் என்று கூறப்படுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.