உலகம்

சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 வைரஸ் கட்டுப்பாடுகள் தொடர்பில் புதிய விதிகள் எதுவும் இப்போது அறிவிப்பதற்கில்லை என மத்திய கூட்டடாட்சி சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

பேர்ணில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், தற்போது நம் நாட்டின் சில பகுதிகள் ஐரோப்பாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தேசிய அளவில், இனி எந்த நடவடிக்கைகளும் முன்னறிவிக்கப்படவில்லை. ஆனால், விதிமுறைகள், சுகாதார விதிகள் மற்றும் தொலைதூரங்களை மதிக்குமாறு பெர்செட் மீண்டும் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுகிறது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மேலும் 8,270 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள், 86 இறப்புகள் என்பவற்றுடன் புதிதாக 304 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அலுவலகத்தின் இன்றைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் மேலும் பேசுகையில், " ஒரு தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது தற்போது தெரியவில்லை. எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுவிற்சர்லாந்தில் முதல் தடுப்பூசிகளை மேற்கொள்ள முடியும் என்று (FOPH) கருதுகிறது. இருப்பினும், அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் இல்லை. எல்லோரும் தங்களைத் தாங்களே பாதுகாப்பதற்குத் தீர்மானிக்க வேண்டும். அதைச் செய்யுங்கள் அல்லது செய்ய வேண்டாம் என நாம் வலியுறுத்தப் போவதில்லை. ஆனால் இது ஒரு உறுதிப்படுத்தும் விளைவைக் கொண்டிருக்க, 60% மக்கள் தடுப்பூசி போட வேண்டும்." என்றார்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் -19 தடுப்பூசி எப்போது பாவனைக்கு வரும் ?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.