உலகம்

இத்தாலியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை புதன்கிழமை தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மொத்தக் குறியீடு ஒரு மில்லியனைக் கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலி கிட்டத்தட்ட 33,000 புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்தமையால் மொத்தம் 1,028,424 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தற்போது இறப்பு வீதங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன, கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 623 இறப்புக்கள் பதிவாகியுள்ளனமையால் மொத்த இழறப்பு 42,953 ஆக உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் இத்தாலியில் முதன் முதலாக வைரஸ் தொற்றுத் தொடங்கியதால், பெரும் பாதிப்புக்குள்ளானது. நாடாளவிய ரீதியில் ஒரு தேசிய பூட்டுதல் அறிவிக்கபட்டது. இது தொற்று வீதங்களைக் கட்டுப்படுத்திய போதும் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியது. கோடைகாலத்தில் மந்தமான வைரஸ் தொற்றுக்கள், சமீபத்திய வாரங்களில், நாட்டின் பெரும்பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வருகின்றன.

பிரதம மந்திரி யூசெப் கோண்டேவின் அரசாங்கம் கடந்த வாரம் நாடு தழுவிய இரவு நேர ஊரடங்கு உத்தரவு மூலம் பார்கள் மற்றும் உணவகங்களை மூடிவிட்டு, தொற்று விகிதங்கள் அதிகமாக உள்ள பிராந்தியங்களில் குடியிருப்பாளர்களின் நகர்வுகளை மேலும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் மருத்துவ சேவை நிபுணர்கள் இவை போதாது எனவும், கடுமையான தேசிய நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

மிலானின் புகழ்பெற்ற சாக்கோ மருத்துவமனையின் தொற்று நோய்கள் துறையின் தலைவர் மாசிமோ கல்லி திங்களன்று நிலைமை "பெரும்பாலும் கட்டுப்பாட்டில் இல்லை" என்று எச்சரித்தார்.

முழு இத்தாலியத் தீபகற்பத்தை மூன்று வர்ணங்களில் ஆபத்து மண்டலங்களாகப் பிரித்த அமைச்சர்கள் குழுவின் (டிபிசிஎம்) கடைசி ஆணை பிறப்பிக்கப்பட்ட  ஒரு வாரத்திற்குப் பிறகும், தொற்றுக்கள் குறையாத நிலை மேலும் தொடர்ந்தால், நவம்பர் 15ந் திகதி அளவில் நாட்டை முழுவதுமாகப் பூட்டடுவதற்கு அரசு முயற்சிக்கலாம் என இத்தாலிய ஊடகங்கள் ஊகம் தெரிவித்துள்ளன.

புதிய தொற்றுநோய்களின் வளைவின் போக்கு மாறவில்லை என்றால் இத்தாலி முழுவதையும் "சிவப்பு மண்டலமாக" மாற்றும், ஒரு புதிய டிபிசிஎம் ஆணை தேவைப்படும் எனவும் இது அடுத்த வார இறுதிக்கு முன்பே பிராந்தியங்களின் பிரதிநிதிகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பக் குழுவின் பிரதிநிதிகளுடன் அரசாங்கத்தால் விவாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

வடக்கு மற்றும் மலையகம் குறித்து கவனம் செலுத்துவது போன்று இந்தியா, இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஸ்ரீநகர் புறநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2016 ஆமாண்டு துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.