உலகம்

அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அதிகளவான பார்வையாளர்கள் நேரடியா கலந்து கொள்ள முடியும் என்பதில் தான் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தலைவர் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முதலில் 2020ஆம் ஆண்டு கடந்த ஜூலை மாதம் தொடங்கவிருந்தன, ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக்கை எவ்வாறு நடத்துவது குறித்து விவாதிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தலைவர்  தாமஸ் பாக்;  ஜப்பானிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு ஜப்பானின் பிரதம மந்திரி யோஷிஹைட் சுகாவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  பாக், 
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் மைதானத்தில் பார்வையாளர்களைக் காண முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனவும், பார்வையாளர்கள் வருவதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதில் ஐ.ஓ.சி பெரும் முயற்சிகள் எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த 11,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தனர், இப்போது ஜூலை 2021 இல் தொடங்க உள்ளது குறிப்பிடதக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.