உலகம்

உலக அளவில் கொரோனா தொற்று அதிகரித்த சில மாதங்களுக்குப் பிறகு, தொற்றாளர்கள் 54 மில்லியனைக் கடந்தும், 1.3 மில்லியனுக்கும் அதிகமானனோர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம்; கொரோனா வைரஸ் தொற்றுநோயை முழுவதுமாக கொரோனா தடுப்பூசி தடுக்காது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் :

ஒரு தடுப்பூசி கொரோனா நோயை குணப்படுத்தும் கருவியாக செயல்படுமே தவிர தானாகவே தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவராது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தடுப்பூசி வழங்குவதில் பெரும் கட்டுப்பாடுகள் உள்ளதாக டெட்ரோஸ் கூறியிருந்தார். முதலில் சுகாதார ஊழியர்கள், வயதானவர்கள் மற்றும் ஆபத்தில் உள்ள பிற மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவர் எனவும் இது இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் மற்றும் சுகாதார அமைப்புகளை சமாளிக்க உதவும் என கூறியுள்ளார்.

ஆனால் அது இன்னும் வைரஸை நிறைய இடங்களுக்கு நகர்த்துவதற்கு வழி செய்யலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் கூடுதல் கண்காணிப்பு தொடர வேண்டும், மக்கள் இன்னும் சோதிக்கப்பட வேண்டும், தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் எனவும் மேலும் தனிநபர்கள் இன்னும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை WHO இன் புள்ளிவிவரங்கள் படி 660,905 கொரோனா வைரஸ் வழக்குகள் ஐ.நா. சுகாதார நிறுவனத்தில் பதிவாகியுள்ளன, இது ஒரு புதிய உயர்நிலையை அமைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.