உலகம்

உலகின் மிகவும் செல்வந்த நகரங்களின் இவ்வாண்டுக்கான பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

இதில் மூன்று நகரங்கள் முதலாம் இடத்தில் உள்ளன. 2020 ஆண்டிற்கான ஒரு புதிய வாழ்க்கை செலவு அறிக்கையின்படி இப்போது ஹாங்காங், சூரிச் மற்றும் பாரிஸ் ஆகியவை அப்பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஹாங்காங்குடன் சமமாக இருந்த சிங்கப்பூர் மற்றும் ஒசாகா ஆகிய நகரங்கள் தரவரிசையில் பின் தள்ளப்பட்டுள்ளன.

கோவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தால் சிங்கப்பூரின் வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதாக பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவின் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் ஆசிய நகரங்கள் பாரம்பரியமாக தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன, ஆனால் தொற்றுநோய் தாக்கம் இந்த தரவரிசை பட்டியலை மாற்றியமைத்துள்ளது என EIU இன் உலகளாவிய வாழ்க்கை செலவுத் தலைவரான உபாசனா தத் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்க-சீனா தொழில்நுட்ப யுத்தத்தின் காரணமாக பெரும்பாலான சீன நகரங்கள் தரவரிசையில் முன்னிலையில் உள்ளன. இது விநியோகச் சங்கிலிகளின் பின்னடைவை சோதித்து நுகர்வோர் விலையை உயர்த்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வந்தம் மிக்க நகரங்களாக முதல் பத்து இடங்களை பிடிக்கும் பட்டியல் இதோ:

1. பாரிஸ். பிரான்ஸ்
1. ஹாங்காங்
1. சூரிச், சுவிஸ்சிலாந்து
4. சிங்கப்பூர்
5. ஒசாகா, ஜப்பான்
5. டெல் அவிவ், இஸ்ரேல்
7. ஜெனீவா, சுவிஸ்சிலாந்து
8. நியூயோர்க் சிட்டி
9. கோபன்ஹேகன், டென்மார்க்
10. லாஸ் ஏன்சல்ஸ்

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.