உலகம்

சுவிற்சர்லாந்தில் கடந்த சில வாரங்களாகவே கோவிட் - 19 வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்துக் காணப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளின் தீவிர சிக்கிச்சைப் பிரிவுகள் நிரம்பல் நிலையை அடைந்துள்ளன.

இந்நிலையில் மக்கள் ஒவ்வொருவரும் தமது சுகாதாரப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை தீவிர சிகிச்சைப்பிரிவுகள் நிரம்பி வரும் நிலையில், இராணுவத்தின் மருத்துவ சேவைப்பிரிவின் உதவியும், அயல்நாடுளிடம் உதவியும் கோரப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் கொரோனா வைரஸ் அதிகமாகவுள்ள பகுதிகளைச் சுட்டும் இந்த வரைபடம் சுவிட்சர்லாந்தில் கடந்த 14 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் வளர்ச்சி வீதத்தைக் காட்டுகிறது.

வைரஸ் தொற்றுச் சோதனைகளின் போது, புதிய தொற்றுக்களின் சராசரி 20.2 சதவிகிதம் நேர்மறையாக இருப்பது சுவிஸ் அதிகாரிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார இயக்குநர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட நிபுணர்கள், (ஜி.டி.கே) "நாங்கள் இன்னும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், முதன்மையாக, சுகாதாரம் மற்றும் தொலைதூர விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் " என்று செய்தியாளர்களிடம் கூறினர்.

தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், சுவிற்சர்லாந்தின் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழி பேசும் பகுதிகள், ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளை விட அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது ஜேர்மன் மொழி பேசும் மாநிலங்களிலும், தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. இத்தாலியின் எல்லையான டிசினோ, ஒரு கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் தொற்றுநோய்களைக் கொண்டிருந்தது. ஆயினும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால், அக்டோபர் நடுப்பகுதியில் ஒப்பீட்டளவில் தொற்று வீதம் குறைந்துள்ளது.

நோய்த்தொற்றுகள் ஏன் அதிகரித்து வருகின்றன?

தொற்றுநோயியல் நிபுணர் எம்மா ஹோட்கிராஃப்ட் கூறுகையில், வெப்பநிலை குறைந்து வருவது காரணமாக இருக்கலாம் என்று கூறினார். “கடந்த ஒன்றரை வாரத்தில் வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது. இது மக்களின் நடத்தையை மாற்றினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஜன்னல்கள் பூட்டிய இடங்களின் உள்ளே அதிகமான நண்பர்களைச் சந்திப்பதனால் உட்புறத்தை சூடாக்குகிறீர்கள். இவை அனைத்தும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும் காரணங்களாகும்" எனத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.