COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போட விரும்பும் கணிசமான எண்ணிக்கையிலான இத்தாலியர்கள் அடுத்த செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் பதிவுகளை பெற்றிருக்க வேண்டும் என்று இத்தாலியின் வைரஸ் அவசரகால சிறப்பு ஆணையர் நேற்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்முதல் திட்டத்தின் மூலம் ஜனவரிமாத மட்டில்; இத்தாலி 3.4 மில்லியன் டோஸ் 'ஃபைசர்' தடுப்பூசியைப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இத்தாலியின் 60 மில்லியன் மக்களில் 1.6 மில்லியனுக்கு தேவையான இரண்டு அளவுகளை வழங்க போதுமானது என்று சிறப்பு ஆணையர் டொமினிகோ அர்குரி கூறியுள்ளார். வயதான இத்தாலியர்கள் மற்றும் அதிக ஆபத்து உள்ள நபர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ஒரு செய்தி மாநாட்டில் கூறுகையில்; இத்தாலியில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் நாம் நினைவில் கொள்ளக்கூடிய ஒரு தடுப்பூசியை வழங்குவதற்கான மிகப்பெரிய பிரச்சாரமாக இது இருக்கும் என்றார்.
மேலும் ஜனவரி மாதத்தில் முதற்கட்ட தடுப்பூசிகள் வழங்கப்படுவதற்கு ஐரோப்பிய மருத்துவ நிறுவனத்திடமிருந்து ஃபைசரின் அங்கீகாரம் சரியான நேரத்தில் முடிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ஆணையர் கூறியுள்ளார். இதேவேளை கொரோனா வைரஸுக்கு எதிரான பிற தடுப்பூசிகளின் ஒப்புதலுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும்; ஆக அவை அனைத்து இத்தாலியர்களுக்கும் தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் 47,800 க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் இதுவரை இறந்துள்ளதோடு பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ளது குறிப்பிடதக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்