கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனியில் வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய்த்தொற்றின் வேகம் உயர்ந்துவருவதையடுத்து ஜெர்மனியில் இதுவரை 9.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இப்பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் :
நவம்பர் இறுதி வரை ஜெர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது ஆகவே தொடர்ந்து டிசம்பர் 20ஆம் திகதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஜனவரியில் 1 லட்சம் பேருக்கு 50 பேர் என்ற (7 நாட்களில்) எண்ணிக்கைக்கு குறைவாக தொற்றுகள் குறையாவிடில் கட்டுப்பாடுகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்