கிழக்கு சிரியாவில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் 19 ஈரான் சார்பு துருப்புக்கள் பலியானதாக வியாழக்கிழமை சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகாலை டெயிர் எஸ்ஸொர் மாகாணத்தில் உள்ள அல்பு கமால் என்ற நகரின் புறத்தே மேற்கொள்ளப் பட்ட இந்த வான் தாக்குதலில் கொல்லப் பட்டவர்கள் பெரும்பாலும் வெளிநட்டு துருப்புக்கள் என உறுதி செய்யப் பட்டுள்ளது. பெரும்பாலும் சிரியா மீது தனிப்பட்ட வான் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொள்வதோ அல்லது நடத்தப் பட்டதாக ஏற்றுக் கொள்வதோ இல்லை.
எனினும் சனிக்கிழமை முதல் மேலும் இரு விமானத் தாக்குதல்களை ஈரான் சார்புப் படைகள் மீது இஸ்ரேல் மேற்கொண்டதாக குறித்த மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்