உலகம்

யேமெனில் சவுதி கூட்டணி நாடுகளுக்கு எதிராகப் போராடி வரும் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களை தீவிரவாதப் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தை மும்மொழிந்திருப்பதாக, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மைக் பொம்பேயோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடென் பதவியேற்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் டிரம்ப் நிர்வாகத்தினால் இந்நகர்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக பைடெனின் பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நிர்வாகத்தின் ஹௌத்திக்களைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்க்கும் முடிவு யேமெனில் மனித அவலத்தை இன்னும் மோசமாக்கும் எனத் தொண்டு அமைப்புக்கள் அச்சம் தெரிவித்துள்ளன. இது தவிர பைடென் பதவியேற்றதும், அவர் ஹௌத்திக்களுக்கு உதவி வரும் ஈரானுடனும், யேமெனில் கடும் தாக்குதல் நடத்தி வரும் சவுதியுடனும் அமெரிக்கா கொண்டிருக்கக் கூடிய உறவை இந்த முடிவு மிகவும் சிக்கலாக்கும் என்றும் கருதப் படுகின்றது.

ஹௌத்திக்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதாரத் தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் ஞாயிறு மாலை மருந்துக் கடை ஒன்றில் நுழைந்து மர்ம நபர் ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். போலிசார் குறித்த நபரைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவர் சுட்டுக் கொல்லப் பட்டார் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.