உலகம்

இன்னும் இரு நாட்களில் அதாவது ஜனவரி 14 ஆம் திகதி வியாழக்கிழமை கொரோனா பெரும் தொற்றின் தோற்றம் குறித்த ஆய்வுக்காக உலக சுகாதார அமைப்பான WHO இன் நிபுணர் குழு சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு செல்லவுள்ளது.

பல தடவை சீன அரசால் அனுமதி மறுக்கப் பட்ட நிலையில் தற்போது இறுதியாக சீன அரசின் அனுமதியின் பேரில் இக்குழு கோவிட்-19 தோன்றிய வுஹான் நகருக்குச் செல்கின்றது.

வுஹானில் விலங்குகளை உயிருடன் விற்கும் சந்தையில் இருந்து தான் இந்த கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றது என்று பரவலாகக் கருதப் பட்டாலும், சீன அரசு இதனை மறுத்து வருகின்றது. 2020 மே மாதமே WHO அமைப்பின் கூட்டத்தில் இந்தப் பெரும் தொற்று வைரஸின் தோற்றம் குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அண்மையில் தான் சீன அரசு இதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், WHO இன் 10 நிபுணர்கள் அடங்கிய குழுவுடன் சீன நிபுணர்களும் இணைந்து வுஹான் நகருக்குச் சென்று இந்த வைரஸ் தோற்றம் குறித்து ஆராயவுள்ளார்கள் எனத் தற்போது தெரிய வந்துள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில், புதிய வகைக் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிரகடனம் செய்யப் பட்டுள்ள அவசர நிலையை ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மறுபுறம் அமெரிக்காவின் புதிய அதிபராக இன்னும் சில நாட்களில் பதவியேற்கவுள்ள ஜோ பைடென் அங்கு தற்போது வழங்கப் பட்டு வரும் பைசர் தடுப்பூசியின் 2 ஆவது டோசேஜ் இனையும் போட்டுக் கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இவர் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில், தான் பதவியேற்றதும் அனைத்து அமெரிக்க மக்களுக்கும் பாரபட்சம் இன்றி கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதே தனது முதன்மையான பணி என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளிவிபரம் :

மொத்த தொற்றுக்கள் : 91 378 222
மொத்த உயிரிழப்புக்கள் : 1 954 660
குணமடைந்தவர்கள் : 65 394 208
ஆக்டிவ் தொற்றுக்கள் : 24 029 354
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 109 361

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 23 143 197 : மொத்த உயிரிழப்புக்கள் : 385 249
இந்தியா : 10 479 913 : 151 364
பிரேசில் : 8 133 833 : 203 617
ரஷ்யா : 3 448 203 : 62 804
பிரிட்டன் : 3 118 518 : 81 960
பிரான்ஸ் : 2 786 838 : 68 060
துருக்கி : 2 336 476 : 22 981
இத்தாலி : 2 289 021 : 79 203
ஸ்பெயின் : 2 111 782 : 52 275
ஜேர்மனி : 1 941 119 : 42 097
கொலம்பியா : 1 801 903 : 46 451
ஆர்ஜெண்டினா : 1 730 921 : 44 654
மெக்ஸிக்கோ : 1 541 633 : 134 368
ஈரான் : 1 292 614 : 56 262
தென்னாப்பிரிக்கா : 1 246 643 : 33 579
கனடா : 668 181 : 17 086
பாகிஸ்தான் : 506 701 : 10 717
சுவிட்சர்லாந்து : 484 506 : 8364
சீனா : 87 591 : 4634
இலங்கை : 48 949 : 240

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.