ஐ.நா சபையின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றி வரும் அந்தோனியோ கட்டரஸ் 2 ஆவது முறையாகவும் 5 வருடங்களுக்கு இதே பதவியில் நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐ,நா பொதுச் சபையின் அதிபர் வொல்கன் பொஷ்கிர் கடந்த வெள்ளிக்கிழமை கட்டரஸின் முடிவுகள் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.
இதன் போது ஐ.நா உறுப்பு நாடுகளது தெரிவு என்னவென்று கண்டறியப் பட்டு அதன் பிரகாரம் அந்தோனியோ கட்டரஸுக்கு 2 ஆவது முறையும் பொதுச் செயலாளர் பதவி 5 வருடங்களுக்கு அளிக்கப் படும் என ஐ.நா சபையின் ஊடகப் பேச்சாளர் ஸ்டெபானே டிஜாரிக் திங்கட்கிழமை பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். அந்தோனியோ கட்டரஸ் தனது விருப்பம் தொடர்பில் ஒரு கடிதத்தையும் பாதுகாப்பு சபை அதிபரிடம் கையளித்துள்ளதாகவும் ஸ்டெபானே மேலும் தெரிவித்தார்.
ஐ.நாவின் 97 ஆவது சட்டப் பிரிவின் படி 5 நிரந்தர உறுப்பு நாடுகளது வீட்டோ அதிகாரம் மற்றும் பாதுகாப்புச் சபை பரிந்துரையின் கீழ் ஐ.நா பொதுச் செயலாளரை நிர்மாணிக்கும் அதிகாரம் ஐ.நா பொதுச் சபைக்கு உள்ளது. 2022 ஆமாண்டு ஜன்வரி 1 ஆம் திகதி அடுத்த ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக் காலம் தொடங்குகின்றது. 2017 ஆமாண்டு ஜனவரி 1 ஆம் திகதி கட்டரஸ் ஐ.நா பொதுச் செயலாளராகப் பதவியேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்