உலகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்களில் இத்தாலி மற்றொரு எழுச்சியை சந்திக்கும் என்று பிரதமர் யூசெப் கோன்டே திங்களன்று எச்சரித்தார். பிரித்தானியா, அயர்லாந்து மற்றும் ஜெர்மனிக்குப் பிறகு, கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தொற்றுக்கள் எங்களிடம் வந்து கொண்டிருக்கின்றன என்று பிரதமர் கொன்டே இத்தாலிய செய்திச் சேவை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

"வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய சுகாதாரத் தகவல்கள் ஆறு வாரங்களில் முதல் முறையாக இனப்பெருக்கம் விகித எண்ணை Rt.1 க்கு மேல் உயர்ந்துள்ளதைக் காட்டியுள்ளது. ஆனால் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இது மேலும் உயர்ந்திருக்கும்" என்று சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா திங்களன்று தெரிவித்துள்ளார்.

இக் கூற்றுக்களின் தொடர்ச்சியாக, ஜனவரி 16 முதல் அறிவிக்கப்பட வேணடிய அவசர நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் விவாதிக்கத் தொடங்கியுள்ளது. ஜனவரி 15 ம் திகதிக்குள் அறிவிக்கப்படவுள்ள அடுத்த அவசர ஆணையின் கீழ் அவசரகால நடவடிக்கைகளில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து பிராந்திய தலைவர்கள், அரசு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இன்று செவ்வாயன்று புதிய நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்படவுள்ளது.

இவற்றின் முடிவாக வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை புதிய ஆணை பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் கொண்டே இது தொடர்பில் கூறுகையில், “ தொற்றுநோயியல் நிலைமையை குறைத்து மதிப்பிடக்கூடாது. தொற்றுநோய் இன்னும் வலுவாக உள்ளது. இந்த காரணத்தினால் எங்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் மற்றும் சரியான நடத்தை தேவை. இது எளிதானது அல்ல, நாங்கள் இன்னும் சில தியாகங்களைச் செய்ய வேண்டும்," என்று கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.