உலகம்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், ஆஸ்ட்ரா செனெகா மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் இறுதிக் கட்ட சோதனைகளும் முடிவடைந்த நிலையில், இத்தடுப்பு மருந்தும் 90% வீதத்துக்கும் அதிக செயற்படு திறன் மிக்கது என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.

தற்போது இந்தத் தடுப்பு மருந்தை ஐரோப்பிய யூனியனில் விநியோகிக்க ஆஸ்ட்ரா செனெகா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்கான முடிவு ஜனவரி 29 ஆம் திகதியளவில் எடுக்கப் படலாம் என ஐரோப்பிய மருந்து ஏஜன்ஸி தெரிவித்துள்ளது. சுமார் 27 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள ஐரோப்பிய யூனியனைத் தற்போது கொரோனா வைரஸின் 2 ஆவது அலையும், புதிய மாறுபட்ட வைரஸ்களும் நிலைகுலையச் செய்த வண்ணம் உள்ளன. ஐரோப்பிய யூனியனில் இதுவரை மொத்தம் 6 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிக மக்கள் கோவிட்-19 பெரும் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்ட்ரா செனெகா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப் பட்டால் அது, பைசர் நிறுவனம் மற்றும் மொடெர்னா ஆகியவற்றின் தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் அனுமதி கிடைக்கப் பெற்ற 3 ஆவது தடுப்பு மருந்தாக விளங்கும். AZD1222 எனப்படும் இந்த தடுப்பு மருந்தை சாதாரண குளிர்சாதன வெப்ப நிலையில் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை விட மாறுபட்ட புதிய வகை திரிபடைந்த கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பிரேசிலில் இருந்து டோக்கியோவுக்கு விமானத்தில் வந்த 4 பேரிடம் இது உறுதி செய்யப் பட்டது. இதில் இருவருக்கு எந்த அறிகுறியும் கூட ஏற்படவில்லை. ஏற்கனவே டோக்கியோவில் அவசர நிலைப் பிரகடனம் உள்ள நிலையில், தற்போது ஒசாக்கா, கியோட்டோ உட்பட 7 மேலதிக முக்கிய இடங்களிலும் இந்த அவசர நிலைப் பிரகடனத்தை ஜப்பான் விரிவு படுத்தியுள்ளது.

ஜப்பானின் புதிய அதிபரான சுகா, இந்த வருட கோடைக் காலத்தில் ஏற்கனவே பிற்போடப் பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் முடிவில் இன்னும் மாற்றமில்லை என்றும், இதற்குள் பெரும் தொற்று கட்டுக்குள் வந்து விடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் இதற்குப் பொது மக்களிடையே பரவலான எதிர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்றுப் புள்ளிவிபரம் :

மொத்த தொற்றுக்கள் : 92 078 727
மொத்த உயிரிழப்புக்கள் : 1 971 785
குணமடைந்தவர்கள் : 65 930 650
ஆக்டிவ் தொற்றுக்கள் : 24 176 292
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 110 082

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 23 369 732 : மொத்த உயிரிழப்புக்கள் : 1 971 785
இந்தியா : 10 495 816 : 151 564
பிரேசில் : 8 195 637 : 204 726
ரஷ்யா : 3 471 053 : 63 370
பிரிட்டன் : 3 164 051 : 83 203
பிரான்ஸ் : 2 806 590 : 68 802
துருக்கி : 2 346 285 : 23 152
இத்தாலி : 2 303 263 : 79 819
ஸ்பெயின் : 2 137 220 : 52 683
ஜேர்மனி : 1 957 492 : 43 203
கொலம்பியா : 1 816 082 : 46 782
ஆர்ஜெண்டினா : 1 744 704 : 44 848
மெக்ஸிக்கோ : 1 556 028 : 135 682
ஈரான் : 1 299 022 : 56 360
தென்னாப்பிரிக்கா : 1 259 748 : 34 334
கனடா : 674 473 : 17 233
பாகிஸ்தான் : 508 824 : 10 772
சுவிட்சர்லாந்து : 487 357 : 8470
சீனா : 87 706 : 4634
இலங்கை : 49 537 : 244

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.