உலகம்

ஜோ பைடென் பதவியேற்க 7 நாட்களே உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி நடவடிக்கையாக கம்யூனிச நாடான கியூபாவை தீவிரவாத நாடாக நீட்டித்து பொருளாதாரத் தடையை ஸ்திரப் படுத்தியுள்ளார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள கியூபா அரசு விரைவில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடென் தலைமையிலான அரசின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் எம்மைத் தீவிரவாத நாடாகக் கருத மாட்டார் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.

இது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 1959 முதல் பகை நாடுகளாக இருந்து வரும் அமெரிக்கா மற்றும் கியூபா இடையே முன்னால் அதிபர் ஒபாமா காலத்தில் நல்லுறவு ஏற்பட்டது. பொருளாதாரத் தடைகள் விலக்கப் பட்டு தூதரக உறவும் உண்டாகியது. ஆனால் டிரம்ப் பதவிக்கு வந்த பின் நிலைமை மீண்டும் மாறியது. கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டன. தீவிரவாதப் பட்டியலிலும் சேர்க்கப் பட்டது.

அண்மையில் அதிபர் டிரம்பின் கீழ் பணியாற்றும் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பெயோ கியூபா தொடர்ந்து தீவிரவாதப் பட்டியலில் நீட்டிக்கப் படுவதாக அறிவித்துள்ளார். இதற்குக் காரணம் கியூபா தொடர்ந்து அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல், கொலம்பியா கொரில்லா படைகளுக்கு ஆதரவளித்தல், வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு சார்பாக செயற்படல் போன்றவற்றை மைக் பாம்பெயோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கியூபா அரசு இது மோசமான சந்தர்ப்ப வாதம் என்றும், 2024 தேர்தலில் குடியரசுக் கட்சியினர் தம்மை தயார் படுத்திக் கொள்வதற்கான முயற்சி என்றும், விரைவில் புதிய அதிபரது பதவியேற்பை எதிர்பார்ப்பதாகவும் கூட அறிவித்துள்ளது.

இதேவேளை சீனாவின் கடும் எதிர்ப்பாலும், எச்சரிக்கையாலும் தனது ஐ.நா தூதுவரை தாய்வானுக்கு அனுப்பும் முடிவை அமெரிக்க மாநிலத் திணைக்களம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் ஆளும் குடியரசுக் கட்சியினரின் அதிபரது அதிகாரம் புதிய நிர்வாகத்துக்கு அடுத்த வாரம் கைமாற இருப்பதால், இந்த முடிவு எடுக்கப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தவிர பெல்ஜியத்துக்கு செல்லவிருந்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மைக் பொம்பேயோ இன் பயணமும் ரத்து செய்யப் பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.