உலகம்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடென் பதவியேற்க சில நாட்களே உள்ள நிலையில், வடகொரியாவில் சமீபத்தில் நடந்த ஆளும் கட்சிக் கூட்டம் ஒன்றில், தமது நாட்டின் அணுவாயுதத் திட்டத்தை வலுப்படுத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜொங் உன் உத்தரவு பிறப்பித்திருப்பதாக புதன்கிழமை உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பைடெனின் கவனத்தை ஈர்க்க வடகொரிய அதிபர் இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என கருதப் படும் நிலையில், முன்பிருந்ததை விட கொரோனா பெரும் தொற்றுக் காரணமாக வடகொரியா இன்னமும் உலக நாடுகளிடம் இருந்து தனிமையாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு வடகொரியா அண்டை நாடுகளுடனான எல்லைகளைத் தீவிரமாக மூடியிருப்பதும் காரணமாகும். இறுதியாக கிம் மற்றும் டிரம்ப் இடையே 2019 பெப்ரவரியில் ஹனோயில் இடம்பெற்ற அணுசக்தி மாநாட்டில் எட்டப் பட்ட இணக்கம், வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கம் உரிய முறையில் செயற்படுத்தப் படாமையால் சீர்குலைந்தது.

அதிநவீன அணுவாயுதங்களை உற்பத்தி செய்வதில் முனைப்புக் காட்டி வரும் வடகொரியாவின் இலக்குகளில், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலும் ஒன்றாகும். இன்றைய சூழலில் அமெரிக்காவின் எந்தவொரு மாநிலத்தையும் வந்து தாக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த அணுவாயுதங்களையும், ராக்கெட்டுக்களையும் வடகொரியா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.