உலகம்

இத்தாலியப் பாராளுமன்றத்தில், ஆட்சியதிகாரத்திலுள்ள பிரதமர் கொண்டே அரசுக்கு, ஆதரவு வழங்கிய கூட்டணிக் கட்சி அமைச்சர்கள் விலகியதால் இத்தாலிய அரசாங்கம் பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இத்தாலிய முன்னாள் பிரதமரும், 'இத்தாலியா விவா' கட்சியின் தலைவருமான மேட்டியோ ரென்சி, இத்தாலிய பிரதமர் யூசெப் கோண்டேவின் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை, இன்று புதன்கிழமை விலக்கிக் கொண்டு, ஆளும் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் நெருக்கடியில் மூழ்கியது.

சுவிற்சர்லாந்தில் புதிய அறிவிப்புக்கள் : ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை - அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்தவை மூடல் !

நீண்டகால அச்சுறுத்தலான நடவடிக்கையில், முன்னாள் பிரதமர் மேட்டியோ ரென்சி இன்று புதன்கிழமை மாலை தனது இத்தாலியா விவா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விலகுவதாக அறிவித்தார். இதனால் இத்தாலிய செனட்டில் பிரதமர் கொண்டேயின் அரசுக்கு முறையான பெரும்பான்மை இல்லாது போயுள்ளது.

தற்போதைய அரசாங்க கூட்டணி மூன்று கட்சிகளைக் கொண்டுள்ளது. ஜனரஞ்சக ஃபைவ் ஸ்டார் இயக்கம் (எம் 5 எஸ்), மைய-இடது ஜனநாயகக் கட்சி (பி.டி) மற்றும் ரென்சியின் சிறிய இத்தாலியா விவா. இத்தாலியா விவாவின் 18 செனட்டர்கள் விலகிக் கொண்டதனால், கோன்டேயின் அரசுக்கு இப்போது செனட்டில் புதிய தேவைப்படுகிறது. இருப்பினும் கீழ் சபையில், அவருடைய பெரும்பான்மை போதுமானதாக உள்ளது. இத்தாலியின் தற்போதைய நிலையில் இந்த அரசியல் பிளவும் வெளியேற்றமும், இத்தாலியின் பொது அரசியலில் பெரும் பின்னடைவினையும், சிக்கல்களையும் தரக் கூடும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழ் மக்கள் சார்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நான்கு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் போடும் திட்டம் ஆரம்பமாகியது. நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள இந்தப் பணியில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக அறிய வருகிறது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோயிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பட்டு வருகின்றன.

இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.