சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக நிலவும் மோசமான காலநிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, சாலைப் போக்குவரத்துக்கள் முடங்கியுள்ளன.
புதன்கிழமை முதல் சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பொழியும் பனி வீழ்ச்சி அதிக அளவில் உள்ளதெனவும், இதனால் பனிச்சரிவுகளின் ஆபத்து மிக அதிகமாக உள்ளதாகவும், சுவிஸ் வானிலை அறிக்கை இன்று காலை தெரிவித்துள்ளது.
சில பிராந்தியங்களில் பனி வீழ்ச்சியின் அளவு 30 சென்டிமீட்டரைத் தாண்டியுள்ளதாகவும், கிழக்கு ஆல்ப்ஸின் பள்ளத்தாக்குகளில் அரை மீட்டருக்கும் அதிகமாகவும், ஆல்ப்ஸின் மத்திய பகுதியில் 100 முதல் 200 சென்டிமீட்டர் வரையும் பதிவாகியுள்ளதாகவும் கடந்த 20 வருடங்களின் பின்னதானகடும் பனிப்பொழிவு இது எனவும் தெரிவிகப்படுகிறது.
சுவிஸ் ஜெர்மன் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவையான எஸ்.ஆர்.எஃப், வானிலை ஆய்வு சேவையின் படி, கடந்த இரண்டு நாட்களில் 96 சென்டிமீட்டர் பனி கிளாரஸ் பகுதியில் பொழிந்துள்ளதாகவும், இது ஜனவரி 29, 1982 இன் 48 மணி நேர எண்ணிக்கையை விட 10 மில்லிமீட்டர் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டாவோஸில் ) உள்ள பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம்வெளியிட்டுள்ள பனிச்சரிவு அபாய அறிவிப்பில், இன்று முழு ஆல்ப்ஸ் தொடர் பள்ளத்தாக்குகளில், அபாய நிலை 5 முதல் அபாய நிலை வரை வலுவானதாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
சூரிச்சில் சாலைப் போக்குவரத்து பல இடங்களிலும் பாதிப்புற்றுள்ள போதிலும், க்ளோட்டன் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து தடைப்படவில்லை எனவும், விமான நிலையப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 33 சென்டிமீட்டர் பனி பெய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்