உலகம்

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.

பின்பு இந்த சதிச் செயலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஹெல்மெண்ட் மாகாணத்தில் போலிஸ் நிலைய வளாகத்துக்குள்ளும் சமீபத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டதில் போலிசார் ஒருவர் பலியானார். இந்தத் தொடர் வன்முறைகளின் உச்சக் கட்டமாக சுப்ரீம் கோர்ட்டின் இரு பெண் நீதிபதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்க அரசும், சர்வதேசமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆப்கானில் நடைமுறையில் உள்ள ஷரியா சட்டம் பெண்கள் வேலை செய்வதற்குத் தடை விதிப்பதால் ஏற்கனவே அரச பதவிகளில் அங்கு குறைவான பெண்களே பணியாற்றி வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதிகளைப் படுகொலை செய்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு இயக்கமும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை என்ற போதும், ஆப்கான் அரசு இதனை நிகழ்த்தியது தலிபான்கள் அமைப்புத் தான் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆப்கானிலுள்ள அமெரிக்க தூதரக பொறுப்பு அதிகாரி ராஸ் வில்சன் டுவிட்டரில் வெளியிட்ட கருத்தில் இந்த மோசமான குற்றச் செயல் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனியும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.