இந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மேற்கு சுலவேசி மாகாணத்தைத் தாக்கிய நிலநடுக்கத்தில் பலியான மக்கள் தொகை 73 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது.
6.2 ரிக்டரில் தாக்கிய இந்த நிலநடுக்கத்தில் 820 இற்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்ததுடன் கிட்டத்தட்ட 27 800 பேர் தமது வீடுகளை இழந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் பலர் மலைப் பாங்கான இடங்களுக்கு இடம்பெயர்ந்தும், இன்னும் சிலர் மீட்பு மையங்களுக்கு விரைந்தும் உள்ளனர். தற்போது இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுவதால் தேடுதல் வேட்டையில் போலிசாரும், இராணுவத்தினரும் குவிக்கப் பட்டுள்ளனர்.
நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில், இறுதியாக 2018 ஆமாண்டு, 6.2 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் பாலு நகரை சுனாமி அலைகள் தாக்கின. சுலவேசி பகுதியில் கிட்டத்தட்ட 1000 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்