உலகம்

உலகளாவிய அடிப்படையில் கோவிட்-19 பெரும் தொற்றினால் அதிகம் பாதிக்கப் பட்டு அதிக உயிரிழப்புக்களையும் சந்துத்துள்ள முதல் நாடான அமெரிக்காவில் இதுவரை 6.13 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளதாக அந்நாட்டு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் உலகளவில் கோவிட்-19 இற்கு எதிராக அதிக தடுப்பூசிகள் செலுத்தப் பட்ட நாடாகவும் அமெரிக்கா விளங்குகின்றது. மாடர்னா மற்றும் பைசர் பயோண்டெட் நிறுவனங்களது தடுப்பூசிகள் அமெரிக்காவில் அதிகபட்சமாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த கொரோனா தடுப்பூசிகள் யாவும் இரண்டு டோஸ்களாக குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தப் பட்டு வருகின்றன.

இதேவேளை அவுஸ்திரேலியாவில், பொது மக்களிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பான அச்சத்தைப் போக்க, அங்கு முதல் ஆளாக பிரதமர் ஸ்காட் மாரிசன் ஊடகங்களுக்கு மத்தியில் பைசர் தடுப்பூசியை அண்மையில் போட்டுக் கொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் கோவிட்-19 தொற்றின் ஆரம்ப கட்டத்தில் பரவல் குறைவாக இருந்த போதும், நவம்பருக்குப் பின் 2 ஆம் அலைத் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகின்றது.

திங்கட்கிழமை முதல் அவுஸ்திரேலியாவில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி அதிகாரப் பூர்வமாக நடைபெறவுள்ள நிலையில், இத்திட்டத்துக்கு எதிராக சில இடங்களில் பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளிவிபரம் :

மொத்த தொற்றுக்கள் : 111 689 821
மொத்த உயிரிழப்புக்கள் : 2 473 230
குணமடைந்தவர்கள் : 86 913 158
ஆக்டிவ் தொற்றுக்கள் : 22 303 433
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 94 064

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 28 706 473 : மொத்த உயிரிழப்புக்கள் : 509 875
இந்தியா : 10 991 651 : 156 339
பிரேசில் : 10 139 148 : 246 006
ரஷ்யா : 4 164 726 : 83 293
பிரிட்டன் : 4 105 675 : 120 365
பிரான்ஸ் : 3 583 135 : 84 147
ஸ்பெயின் : 3 133 122 : 67 101
இத்தாலி : 2 795 796 : 95 486
துருக்கி : 2 631 876 : 27 983
ஜேர்மனி : 2 388 417 : 68 343
கொலம்பியா : 2 222 018 : 58 685
ஆர்ஜெண்டினா : 2 060 625 : 51 122
மெக்ஸிக்கோ : 2 038 276 : 179 797
ஈரான் : 1 566 081 : 59 409
தென்னாப்பிரிக்கா : 1 502 367 : 48 940
கனடா : 843 301 : 21 630
பாகிஸ்தான் : 571 174 : 12 601
சுவிட்சர்லாந்து : 547 775 : 9886
சீனா : 89 831 : 4636
இலங்கை : 79 480 : 435

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தி பிரதான கட்சிகளான திமுக, அதிமுக , ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதிப் பங்கீடுகளிலும் ஈடுபட்டிருக்க, நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதற்குமான தமது 234 வேட்பாளர்களை உறுதிசெய்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ந் திக தி தேர்தல் நடப்பதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள், கூட்டணிகள் அமைப்பதிலும், ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னால் அதிபர் நிக்கொலஸ் சர்கோஸிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வடக்கு நைஜீரியாவின் ஷம்ஃபரா மாகாணத்தின் போர்டிங் கல்லூரியில் இருந்து கடத்தப் பட்ட அனைத்து 279 மாணவியரும் விடுவிக்கப் பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.