உலகம்

பல வருடங்களுக்குப் பின் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைத் தாக்கி வரும் கடும் பனிப் புயல் மற்றும் உறை குளிரை பேரழிவாக அதிபர் ஜோ பைடென் பிரகடனப் படுத்தியுள்ளார்.

சுமார் 170 மில்லியன் அமெரிக்க மக்களைக் கொண்டுள்ள டெக்சாஸ் மாநிலத்தில் கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் குடிநீருக்காக அவதிப் படுகின்றனர்.

மேலும் பல மில்லியன் கணக்கான மக்கள் மின்சார வசதியும் இன்றி அவதிப் படுகின்றனர். தொடரும் பனிப்பொழிவு மற்றும் உறை குளிரால் சுமார் 60 பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புக்கள் மூலமும், தேசிய பேரிடர் முகாமை அமைப்பு மூலமும் டெக்சாஸில் கடும் குளிராலும், பனிப்பொழிவாலும் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் நடவடிக்கையை அமெரிக்க அரசு முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் புற நகர்ப் பகுதியில், ஒரு துப்பாக்கி விற்கும் கடையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு மர்ம நபர் இருவர் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். பதிலுக்கு அக்கடை உரிமையாளர்களும், வாடிக்கையாளர்களும் திருப்பி சுட்டுள்ளனர். இச்சம்வத்தில் அந்த மர்ம நபரும் அவரால் சுடப்பட்ட இருவரும் உயிரிழந்துள்ளனர். Metairie என்ற புறநகர்ப் பகுதியில் உள்ள Jefferson துப்பாக்கி விற்கும் கடைக்குள்ளே தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த 2 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூட அறிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் தனி நபர் துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பில் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருமாறு தொடர்ச்சியாக பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதா, இல்லையா? என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தி பிரதான கட்சிகளான திமுக, அதிமுக , ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதிப் பங்கீடுகளிலும் ஈடுபட்டிருக்க, நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதற்குமான தமது 234 வேட்பாளர்களை உறுதிசெய்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ந் திக தி தேர்தல் நடப்பதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில், தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகள், கூட்டணிகள் அமைப்பதிலும், ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னால் அதிபர் நிக்கொலஸ் சர்கோஸிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வடக்கு நைஜீரியாவின் ஷம்ஃபரா மாகாணத்தின் போர்டிங் கல்லூரியில் இருந்து கடத்தப் பட்ட அனைத்து 279 மாணவியரும் விடுவிக்கப் பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.