சுவிஸ் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகநடைபெற்ற பேரணியில், குறைந்தது 1,500 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்காவ் மாநிலத்தில் Wohlen (AG,நேற்று நடைபெற்ற இப்பேரணியில் மத்திய அதிகாரிகள் முடிவு செய்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைளுக்கு எதிராக, சுமார் 1,500 முதல் 2,000 பேர் வரை கலந்துகொண்டதாகத் தெரிய வருகிறது.பங்கேற்பாளர்கள் முகமூடியை அணிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வோஹ்லன் பிராந்திய காவல்துறை, எதிர்ப்புப் பேரணிக்கு அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும், கலந்து கொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றியது.
புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமா ?
இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜுக் நகரில் இதேபோன்ற ஆர்ப்பாட்டத்தை சுமார் 800 பேருடன் நடத்திய "ஸ்டில்லர் ஆர்ப்பாட்டம்" (அமைதியான எதிர்ப்பு) சங்கத்தால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை கறிப்பிடத்தக்கது.
கமலி ஃப்ரம் நடுக்காவேரி : விமர்சனம்
இதேவேளை சியோனில் அங்கீகரிக்கப்படாதவகையில் இது போன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட நூற்றுக்கும் குறைவான மக்கள் கூடினர். அங்கீகாரத்தைப் பெறாத இந்தப் பேரணியை காவல்துறையினர் கலைத்தனர். பேரணியில் பங்கு கொண்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது புகார் அளிக்கப்படும் என்றும் மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்