உலகம்

சுவிஸ் மத்திய அரசு, ஏப்ரல் 1ம் திகதி வரை உணவகங்களை மூடுமாறு கட்டளையிட்டுள்ள போதிலும், பல மாநிலங்கள் தங்கள் உணவக வணிகத்தை முன்னதாகவே மீண்டும் தொடங்க விரும்புவதாகக் கூறியுள்ளன.

கடந்த வாரம் வாட் மாநில அதிகாரிகள் தங்கள் காஸ்ட்ரோனமி துறையை, மார்ச் 15 முதல் மீண்டும் மதிய உணவு சேவைக்காக திறந்து மாலை 6 மணிக்கு மூடுவதற்கான சம்மதத்தினை அறிவித்துள்ளனர். அந்த நேரத்தில் எடுத்துச் செல்லும் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஜெனீவா, கிராபுண்டன், சென்.காலன், அப்பென்செல்லர், நிட்வால்டன் மற்றும் ஒப்வால்டன் போன்ற மாநிலங்கள் மார்ச் மாதத்தில் மீண்டும் உணவகங்கள் திறக்க வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளன. இந்தவகையில் தற்போது அதிகமான மாநிலங்கள் வாட் மாநிலத்துடன் இணைகின்றன.

உலகின் கவனம் பெறும் டைம்ஸ் 100 பேர் பட்டியலில் தமிழ் கனேடியன் மைத்ரேயி ராமகிருஷ்ணன் !

மத்திய அரசு பிப்ரவரி 24 ம் திகதி இதுதொடர்பக மாநில அரசாங்கங்களுடன் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பகால மறு திறப்புகள் நல்ல யோசனையாக இருக்காது என்று சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் ஏற்கனவே கூறியுள்ளார். கடந்த இலையுதிர்காலத்தில் சில மாநிலங்களில் உணவகங்கள் திறந்திருந்தன, மற்றவற்றில் மூடப்பட்டிருந்தன, இதனால், மக்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்தில் கோவிட் -19 நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேரணி - ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் !

இதேவேளை கடந்த வார இறுதியில் சுவிஸின் பல பகுதிகளிலும் காலநிலை சீராக இருந்ததனால், வெளியடங்களில் மக்கள் அதிகமாக கூடியிருந்ததாகவும் தெரிய வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.