மியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நாளாந்தம் மக்கள் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை ஒடுக்குவதற்காக இராணுவம் வன்முறையைக் கையாளவதை G7 அமைப்பு நாடுகளும் கண்டித்துள்ளன.
இது தொடர்பாக G7 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், மக்களது அமைதி வழியிலான எதிர்ப்பை வன்முறையுடன் ஒடுக்கும் எவராயினும் அவர்கள் உடனே அதனைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், மேலும் மியான்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பை கண்டிப்பதில் நாம் அனைவரும் சேர்ந்தே உள்ளோம் என்றும், மியான்மாரின் மாநில கவுன்சிலரான ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மியிண்ட் ஆகியோர் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்கப் பட வேண்டும் என்றும் மேலும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இராணுவத்தின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மாரில் மக்கள் விடாது ஆயிரக் கணக்கில் ஒன்று கூடி அதன் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்