உலகம்

உலகில் மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் கோவிட்-19 பெரும் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அமெரிக்காவில் நாடளாவிய ரீதியில் அதிகாரப்பூர்வமாக இன்றிலிருந்து எதிர்வரும் 5 நாட்களுக்குத் துக்கம் அனுட்டிக்கப் படவுள்ளது.

மேலும் அனைத்து இடங்களிலும் அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப் படவுள்ளது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், கோவிட்-19 இனால் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை முழுவதும் மெழுகுவர்த்திகள் ஏற்றப் பட்டன. இதில் அதிபர் பைடென், அவரது மனைவி ஜில் பைடென், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாஃப் ஆகியோர் பங்குபற்றியதுடன் சில நிமிடங்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

இதேவேளை முதலாம் உலகப் போர், 2 ஆம் உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகிய 3 உலகப் போர்களிலும் அமெரிக்க தரப்பில் உயிரிழந்த மொத்த மக்களது தொகையை விட கோவிட்-19 பெரும் தொற்றால் உயிரிழந்த மக்களது தொகை அதிகம் எனப் புள்ளி விபரம் வெளியாகி உள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 112 335 379
மொத்த உயிரிழப்புக்கள் : 2 487 225
குணமடைந்தவர்கள் : 87 864 833
ஆக்டிவ் தொற்றுக்கள் : 21 983 321
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 93 389

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 28 826 307 : மொத்த உயிரிழப்புக்கள் : 512 590
இந்தியா : 11 016 434 : 156 498
பிரேசில் : 10 197 531 : 247 276
ரஷ்யா : 4 189 153 : 84 047
பிரிட்டன் : 4 126 150 : 120 757
பிரான்ஸ் : 3 609 827 : 84 613
ஸ்பெயின் : 3 153 971 : 67 636
இத்தாலி : 2 818 863 : 95 992
துருக்கி : 2 646 526 : 28 138
ஜேர்மனி : 2 399 500 : 68 772
கொலம்பியா : 2 229 663 : 58 974
ஆர்ஜெண்டினா : 2 069 751 : 51 359
மெக்ஸிக்கோ : 2 043 632 : 180 536
ஈரான் : 1 590 605 : 59 663
தென்னாப்பிரிக்கா : 1 504 588 : 49 150
கனடா : 849 517 : 21 723
பாகிஸ்தான் : 573 384 : 12 658
சுவிட்சர்லாந்து : 550 224 : 9907
சீனா : 89 852 : 4636
இலங்கை : 80 517 : 450

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.