ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.
இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. லிண்டா தோமஸ் வெளியுறவுத் துறையில் 35 ஆண்டு கால அனுபவம் பெற்றவர் ஆவார்.
ஆப்பிரிக்கா உட்பட சுமார் 4 கண்டங்களில் இவர் அமெரிக்காவுக்கான வெளியுறவு சேவையில் ஈடுபட்டிருந்தார். இவரது நியமனம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் லிண்ச்டா தாமஸுக்கு ஆதரவாக 78 பேரும், எதிராக 20 பேரும் வாக்களித்தனர்.
இதேவேளை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்வதை அதிபர் ஜோ பைடென் ஏற்றுக் கொள்ள மாட்டார் என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக ஆப்கானில் அவ்வப்போது பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையிலும், தலிபான்களும் ஆப்கான் அரசும் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்