உலகம்

கோவிட்-19 பெரும் தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் பின்லாந்தில் மீண்டும் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அங்கு பிறப்பிக்கப் பட்டிருந்த அவசர நிலை பின்பு நீக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிதாக அவசர நிலை பிறப்பிக்கப் பட்டுள்ளதுடன் மார்ச் 8 ஆம் திகதி முதல் மார்ச் 28 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் உட்பட முக்கிய இடங்கள் பல மூடப் படுவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அத்தியவாசிய தேவைகள் இன்றி பயணங்களைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியை அரசு தொடங்கியுள்ளது. முதற் கட்டமாக 6 மருத்துவ மனைகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப் படவுள்ளது. அதன் பின் படிப்படியாக பொது மக்களுக்கு வழங்கப் படவுள்ளது.

மறுபுறம் வியட்நாமில் கோவிட்-19 பெரும் தொற்றுக்கு எதிராக ஸ்புட்னிக் மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பு மருந்துகளைப் பாவிக்க அந்நாட்டு சுகாதாரத் துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. முதற்கட்டமாக சுமார் 150 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் விதத்தில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸிற்கு எதிராக சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா மற்றும் பைசர் தடுப்பு மருந்துகள் சிறப்பாகச் செயலாற்றுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும் பைசர் தடுப்பு மருந்தானது உருமாற்றம் அடைந்த வைரஸுக்கு எதிராக மிக வீரியமாகச் செயற்படுவதாக பிரிட்டன் ஆய்வு தெரிவிக்கின்றது.

இதேவேளை உலகளவில் சுமார் 45 இற்கும் அதிகமான நாடுகளுக்கு சீனாவில் தயாரிக்கப் பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள AP ஊடகம், சீனா இதுவரை மொத்தம் 1/2 பில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் 2.6 பில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 115 034 561
மொத்த உயிரிழப்புக்கள் : 527 226
குணமடைந்தவர்கள் : 90 758 900
ஆக்டிவ் தொற்றுக்கள் : 21 724 281
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 90 254


நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 29 314 254 : மொத்த உயிரிழப்புக்கள் : 527 226
இந்தியா : 11 124 527 : 157 275
பிரேசில் : 10 589 608 : 255 836
ரஷ்யா : 4 268 215 : 86 896
பிரிட்டன் : 4 182 009 : 122 953
பிரான்ஸ் : 3 760 671 : 86 803
ஸ்பெயின் : 3 204 531 : 69 609
இத்தாலி : 2 938 371 : 97 945
துருக்கி : 2 711 479 : 28 638
ஜேர்மனி : 2 455 569 : 70 924
கொலம்பியா : 2 255 260 : 59 866
ஆர்ஜெண்டினா : 2 112 023 : 52 077
மெக்ஸிக்கோ : 2 089 281 : 186 152
ஈரான் : 1 639 679 : 60 181
தென்னாப்பிரிக்கா : 1 513 959 : 50 077
கனடா : 870 033 : 22 017
பாகிஸ்தான் : 582 528 : 12 938
சுவிட்சர்லாந்து : 557 492 : 9988
சீனா : 89 923 : 4636
இலங்கை : 83 552 : 476

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.