உலகம்

சில நாட்களுக்கு முன்பு வடக்கு நைஜீரியாவின் ஷம்ஃபரா மாகாணத்தின் போர்டிங் கல்லூரியில் இருந்து கடத்தப் பட்ட அனைத்து 279 மாணவியரும் விடுவிக்கப் பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப் பட்ட அனைத்து மாணவியரும் அரச இல்லத்துக்கு வந்திருப்பதாகவும் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் டாக்டர் பெல்லோ மட்டவல்லே AFP ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இக்கடத்தல் சம்பவத்தில் ஜங்கெபெ கிராமத்தில் உள்ள பெண்கள் இடைநிலைப் பள்ளியில் இருந்து மொத்தம் 317 பள்ளி மாணவியர் கடத்தப் பட்டதாக முன்பு தெரிவிக்கப் பட்டது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 279 என்று கூறப்படுகின்றது. கடந்த 3 மாதங்களில் நைஜீரியாவில் இடம்பெற்ற 3 ஆவது பள்ளி முற்றுகையான இதில் ஈடுபட்ட பண்டிட்ஸ் எனப்படும் ஆயுதக் குழுவுடன் அரச அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்பே இவ்வாறு பள்ளி மாணவியர் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் கடந்த சில வருடங்களாகப் பல தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன் கடத்தல் சம்பவங்களையும் முன்னெடுத்துள்ளனர். தண்டப் பணம் அறவிடல், கற்பழிப்பு மற்றும் கொள்ளை போன்ற நோக்கங்களுக்காக இவர்கள் இக்கடத்தல் செயல்களில் ஈடுபடுகின்றனர். 2016 ஆமாண்டு இவர்களுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளை நைஜீரிய இராணுவம் மேற்கொண்டதுடன் 2019 ஆமாண்டு பண்டிட்ஸ் குழுவினருடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டும் இருந்தனர்.

ஆனாலும் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. 2020 டிசம்பரில் நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரியின் சொந்த மாநிலமான கட்சினாவின் கங்கரா என்ற இடத்தில் உள்ள பள்ளியில் இருந்து 300 இற்கும் அதிகமான மாணவர்கள் கடத்தப் பட்டிருந்தனர். ஆனால் அரசின் கடும் முயற்சிக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர். இதற்கு முன்பு சிபோக் பகுதியில் இருந்து போக்கோ ஹராம் குழுவைச் சேர்ந்த ஜிஹாதிஸ்ட் போராளிகள் சுமார் 276 பள்ளிச் சிறுமியரைக் கடத்திய சம்பவம் உலகை உலுக்கியிருந்தது. இதில் தொடர்புடைய இன்னும் 100 பள்ளி மாணவியர் இன்னும் திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 1 தசாப்தத்துக்கும் அதிகமாக நைஜீரியாவில் ஜிஹாதிஸ்ட்டுக்களால் மேற்கொள்ளப் பட்டுள்ள பல்வேறு தாக்குதல்களில் 30 000 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். 2016 ஆமாண்டு ஜனவரி முதல் 2020 மார்ச் வரை பல்வேறு கடத்தல் சம்பவங்களில் மாணவர்களை மீட்பதற்காக இதுவரை $11 மில்லியன் டாலர்கள் மீட்புப் பணம் செலுத்தப் பட்டிருப்பதாகவும் ஒரு ஆய்வு கூறுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.