உலகம்

கிழக்கு இந்தோனேசியாவில் பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 55 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும், 40 பேரைக் காணவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் ஆயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒரு சில இடங்களில் 10 000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தோனேசிய அனர்த்த முகாமை அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட தகவலில், பலியானவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து நிலவி வரும் மோசமான காலநிலை மீட்புப் பணியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக பல இடங்களில் வீடுகளும், பாலங்களும் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன என்றும் போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தோனேசியா உலகில் ஒவ்வொரு வருடமும் பருவ மழை காரணமாக வெள்ளப் பெருக்கை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாகும்.

கடந்த வருடத் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.