உலகம்

இவ்வருடம் பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தின் ஜெஷெரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக நாசாவின் அதி நவீன பெர்சேவெரன்ஸ் விண்கலம் தரையிறங்கியிருந்தது.

இந்த விண்கலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று அதில் அடங்கியிருக்கும் தானியங்கி சிறிய ரோபோ ஹெலிகாப்டரான இன்கெனியூட்டி ஆகும்.

இந்த ஹெலிகாப்டர் பெர்செவரன்ஸில் இருந்து வெற்றிகரமாக பிரிந்து ஏப்பிரல் 4 ஆம் திகதி அதாவது நேற்று ஞாயிற்றுக்கிழமை செவ்வாயின் தரையில் இறங்கியுள்ளது. இன்கெனியூட்டி தான் செவ்வாய்க் கிரகத்தில் மட்டுமன்றி மனிதனால் வேறு ஒரு கிரகத்துக்கு அனுப்பப் பட்ட முதல் தானியங்கி டிரோன் வகை ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தற்போது செவ்வாயின் தரையில் இருக்கும் இந்த இன்கெனியூட்டி ஹெலிகாப்டர் இன்னும் ஒரு வாரத்தில் ஏப்பிரல் 11 ஆம் திகதிக்குப் பின்பு தான் செவ்வாயின் வளிமண்டலத்தில் பறக்கவுள்ளது.

பூமியில் இருந்து 471 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியிருக்கும் இந்த பெர்செவெரன்ஸ் விண்கலத்தின் இன்கெனியூட்டி ஹெலிகாப்டர் ஆனது குறைந்தது 31 நாட்கள் செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது. ஆயினும் இந்த ஹெலிகாப்டர் ஆனது செவ்வாய்க் கிரகத்தில் இரவு நேரத்தில் நிலவும் கடும் குளிரைத் தாங்குவது என்பது மிகச் சவாலான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சுமார் -90 டிகிரி செல்சியஸ் குளிரை சமாளிக்க இந்த ஹெலிகாப்டர் தன்னைத் தானே சூடாக வைத்திருக்கும் விதத்தில் சார்ஜ் செய்துகொள்ளக் கூடிய ஒரு தொழிநுட்பத்தைக் கொண்டுள்ளது. பெர்செவெரன்ஸ் விண்கலம் தரையிறங்கிய ஜெஷெரோ பள்ளத்தாக்கானது மிகவும் கரடு முரடானது ஆகும். எனவே இந்த விண்கலம் நகரக் கடினமான இடங்களுக்கு பறந்து சென்று துல்லியமான புகைப் படங்களை எடுத்து ஆய்வு செய்வது என்பது முக்கியமானதாகும்.

இதற்குப் பயன்படும் விதத்தில் தான் இன்கெனியூட்டி டிரோன் ஹெலிகாப்டர் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வெற்றிகரமாக இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்கும் போதும் அது தொடர்ந்து செயற்படுவது என்பதும் மிகவும் கடினமான ஒன்று தான் என நாசாவின் JPL ஆய்வு கூட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.