உலகம்

உலகளவில் கோவிட்-19 பெரும் தொற்றால் மிக அதிகளவு பேர் பாதிக்கப் பட்டும், அதிகளவு பேர் உயிரிழந்தும் உள்ள நாடு அமெரிக்காவாகும்.

இங்கு தான் உலகளவில் அதிகபட்சமாக 16.1 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 40 இலட்சம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப் பட்டுள்ளது.

இவை உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் ஆகும். அமெரிக்காவில் அதிகபட்சமான மக்களுக்கு மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளே வழங்கப் பட்டுள்ளன. இவ்வகை தடுப்பு மருந்துகள் குறைந்தது 2 வார இடைவெளியில் 2 டோசேஜ்கள் தனி நபர் ஒருவருக்கு செலுத்தப் பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இந்த 2 டோசேஜ்களையும் எடுத்துக் கொண்ட மக்களது எண்ணிக்கை 5 கோடியே 80 இலட்சத்தை எட்டியிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களது தடுப்பூசிகள் தவிர தனிநபருக்கு ஒரு டோசேஜ் மாத்திரம் செலுத்தினால் மட்டும் போதுமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் அங்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான மக்கள் இந்தத் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டு வருகின்றனர். அதிகரித்து வரும் கோவிட்-19 பெரும் தொற்றின் 3 ஆவது அலைத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் அரசு லாக்டவுனை இன்னும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் முக்கிய நகரங்களில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் யாவும் நிறைந்திருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் இந்தோனேசியாவை அடுத்து கோவிட்-19 பெரும் தொற்றால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.

உலகளாவிய கொரோனா பெரும் தொற்று புள்ளி விபரம் :

மொத்த தொற்றுக்கள் : 131 938 133
மொத்த உயிரிழப்புக்கள் : 2 866 656
குணமடைந்தவர்கள் : 106 234 913
ஆக்டிவ் தொற்றுக்கள் : 22 836 564
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 98 725

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 31 420 331 : மொத்த உயிரிழப்புக்கள் : 568 777
பிரேசில் : 12 984 956 : 331 530
இந்தியா : 12 589 067 : 165 132
பிரான்ஸ் : 4 822 470 : 96 678
ரஷ்யா : 4 580 894 : 100 374
பிரிட்டன் : 4 359 388 : 126 836
இத்தாலி : 3 668 264 : 111 030
துருக்கி : 3 487 050 : 32 263
ஸ்பெயின் : 3 300 965 : 75 698
ஜேர்மனி : 2 895 631 : 77 557
கொலம்பியா : 2 446 219 : 64 094
போலந்து : 2 438 542 : 54 941
ஆர்ஜெண்டினா : 2 393 492 : 56 199
மெக்ஸிக்கோ : 2 250 458 : 204 147
ஈரான் : 1 932 074 : 63 160
தென்னாப்பிரிக்கா : 1 551 964 : 52 987
கனடா : 1 003 988 : 23 062
பாகிஸ்தான் : 692 231 : 14 821
பங்களாதேஷ் : 637 364 : 9266
சுவிட்சர்லாந்து : 605 342 : 10 353
இலங்கை : 93 436 : 581
சீனா : 90 305 : 4636

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.