உலகம்

சுவிற்சர்லாந்தில் மிதமான குளிர்நிலையும், குளிர்காற்றும் நிலவுகிறது. ஸ்காண்டிநேவியாப் பகுதியிலிருந்து நேற்று மாலை சுவிற்சர்லாந்தை எட்ட்டிய குளிர்தாழமுக்கம், இந்தக் குளிர்கால வெப்பநிலையைக் கொண்டுவருகிறது என சுவிஸ் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இன்று மாறும் இந்தக் காலநிலை, புதன்கிழமை மாலை வரை, உள்நாட்டில். குறைந்த வெப்பநிலை குறைந்தபட்சம் -3 முதல் - 8 டிகிரி வரை குறையும் எனவும், வியாழக்கிழமை இரவு முதல் காலநிலை மீண்டும் சுமுகமாகும் எனவும், சில உயர் பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலநிலை மாற்றம் அல்ப்ஸ்தொடரின் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் எனவும் அறியப்படுகிறது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.