உலகம்

ஐரோப்பாவில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இத்தாலியும் ஒன்று. உலகை அச்சுற்திவரும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான முதல் ஐரோப்பியநாடு இத்தாலி.

இந்தப் பெருந் தொற்றால், இங்கு கடந்த ஒரு வருட காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வேலை இழந்துள்ளதான உத்தியோகபூர்வ தகவல்களை நேற்றுச் செவ்வாய் கிழமை தேசிய புள்ளிவிவர அலுவலகம் இஸ்டாட் தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில், வேலையின்மை விகிதம் 9.8 சதவீதத்திலிருந்து 10.2 சதவீதமாக சற்று உயர்ந்தது எனவும், இந்த நெருக்கடி இளையவர்களையும், ஆபத்தான வேலைகள் உள்ளவர்களையும் கடுமையாக பாதிக்கிறது என்பதைக் குறிப்பிட்டு, "மறுசீரமைப்பு அவசியம் தேவை. ஒரு தலைமுறையே ஆபத்தில் உள்ளது" என்று தொழிலாளர் சந்தை நிபுணரான பிரான்செஸ்கோ செகெஸி எச்சரித்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் இத்தாலி இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மிகப்பெரிய சுருக்கத்தை பதிவு செய்தது. இது இத்தாலிக்கான பேரிழப்பு மட்டுமல்ல, ஐரோப்பாவின் மோசமான பொருளாதார சரிவுகளிலும் ஒன்றாகும்.

நாட்டின் முக்கிய தொழிற்சங்கமான சிஜில், செவ்வாய்க்கிழமை தொழிலாளர் தரவை துயரமானது என்று வர்ணித்துள்ளது. உணவகங்கள், பார்கள் மற்றும் பெரும்பாலான கடைகளை மூடுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் முழுவதும் தொடரும் என்று அரசாங்கம் அறிவித்ததை எதிர்த்து, சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் செவ்வாயன்று இத்தாலி முழுவதும் உள்ள நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.