உலகம்

சுவிற்சர்லாந்தில் அறுபது ஆண்டுகளின் பின்னதாக, ஏப்ரல் மாத்தில் அதி உயர்ந்த குறை வெப்பநிலையாக -26.3 டிகிரி பதிவாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்மிகு சுற்றுலாத் தளமாகிய, ஜங்ஃப்ரோவில்  குறைந்த வெப்பநிலை இன்று காலை பதிவாகியுள்ளது. சுவிஸ் தனியார் சேவையான MeteoNews தகவலின் படி, ஜங்ஃப்ராஜோக் ஆய்வகத்தில் ஏப்ரல் மாதக் காலநிலைப் பதிவுகளில் 1961 ன் பின் இன்று காலை குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியில் ஒரு மில்லியன் மக்கள் வேலை இழப்பு !

ஸ்கன்டிநேவியப் பகுதியிலிருந்து நகர்ந்துள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக, சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளிலும், சூரிய வெளிச்சம் இருந்த போதும் குளிர் காலநிலை நிலவுகின்றது. சில இடங்களில் பனிப்பொழிவும், 100 மீற்றர் வேகத்தில் காற்றும் வீசியுள்ளதாகவும் அறியவருகிறது. நாளை மதியத்தின் பின்னதாக இக் காலநிலையில் மாற்றம் வரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த சில நாட்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு லட்சத்திற்கு மேலாக இருந்து வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இலட்சத்தை நெருங்கியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் தற்போதைய கட்டுப்பாடுகளின் தளர்த்தலின் பின்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியின் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பிராந்தியங்களுக்குள் நுழைய அல்லது வெளியேற ஒரு பயண "பாஸ்" விரைவில் தேவைப்படும் என்று இத்தாலியின் பிரதமர் அறிவித்துள்ளார்.