சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் வயது வரம்பு, பல வாரங்களாக குறைந்து வருகிறது என்று, பொது சுகாதார அலுவலகத்தின் (FOPH) புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தேசிய தொலைக்காட்சியின் பொது ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அலையின் போது மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்களின் விகிதத்தைக் கொண்டிருந்ததாகவும், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து அது குறைந்து வருவதாகவும் மேலும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது புதிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மிக உயர்ந்த விகிதத்தை 60 முதல் 69 வரையிலான வயதுடைய நோயாளிகள் குறிக்கின்றனர். இந்த குளிர்காலத்தில் சுமார் 25 சதவீதம் 30 முதல் 59 வயதுடையவர்கள் அதிகமான மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.
வயது முதிர்ந்தவர்களின் குழுக்களுக்கு முதன்முதலில் தடுப்பூசி போடப்பட்டது என்பதன் மூலம் இதன் போக்கை விளக்க முடியும் எனவும், வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அவை உருவாக்கியுள்ளன என்பதையும் இதன் மூலம் ஏற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை மறுபுறம், இன்னும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாத இளையவர்களை மிகவும் வேகமாகப் பரவும் பிரிட்டிஷ் மாறுபாடு வைரஸ் தொற்றுக்கு ஆளாகின்றனர். தற்போது சுவிற்சர்லாந்தில் உள்ள 90 சதவீத தொற்றுக்களை குறிக்கிறது என்றும், தேசிய சுகாதார அலுவலகம் ( FOPH ) தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்