உலகம்
Typography

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் சீன ஊடகமான cctv தெரிவித்துள்ளது.

முன்னதாக டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது பீஜிங் நிர்வாகத்தைக் கடுமையாக சாடியிருந்ததுடன் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 45% வீத வரி விதிப்பேன் எனவும் எச்சரித்திருந்தார். இதனால் அதிருப்தி அடைந்திருந்த சீன அரசு டொனால்ட் டிரம்புடன் இரு தரப்பு உறவை மேம்படுத்துவதுடன் முக்கியமாக உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசுகளாக விளங்கும் அமெரிக்காவும் சீனாவும் தமக்கிடையே பொருளாதார நெருக்கத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்பதும் டிரம்ப் உடனான சந்திப்பின் போது முக்கிய இலக்குகளாகக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்துக்காக ஆசியாவின் மிகப்பெரிய சக்தியான சீனா அமெரிக்காவின் எதிரி என்றும் உலக சந்தையில் சீனாவின் நாணயத்தின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்வேன் என்றும் சூளுரைத்திருந்தார். ஆனால் அவர் வெற்றி பெற்ற பின்போ நிலமை தலைகீழாக மாறி சீனா மறுபடியும் அமெரிக்காவுடன் கைகோர்க்க வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று CBS ஊடகத்துக்கு டிரம்ப் அளித்த வெற்றி உரையில் அமெரிக்க வாழ் முஸ்லிம்கள், கருப்பினத்தவர்கள் மற்றும் லத்தினோக்கள் மீதான வன்முறைகளை அமெரிக்கர்கள் கை விடுமாறும் இந்நாட்டை அனைவருக்கும் உகந்த நாடாகக் கொண்டு வருவதே தனது நோக்கம் என்றும் இதனால் தன்னைக் குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்