உலகம்
Typography

2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது பாரிய சிறைத் தகர்ப்பு சம்பவத்தில் சம்பந்தப் பட்டதற்காகப் பதவி நீக்கம் செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்ட முன்னால் அதிபரான மோர்ஸியின் மரண தண்டனையை ரத்து செய்து எகிப்து நீதிமன்றம் ஒன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளதுடன் இவரின் தடை செய்யப் பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களது மரண தண்டனையும் நீக்கப் பட்டுள்ளது.

எனினும் இவர்கள் அனைவரின் மீதும் புதிதாக விசாரணை மேற்கொள்ளப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் முன்னதாக ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டிருந்த 21 முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி உறுப்பினர்களது தண்டனையும் ரத்து செய்யப் பட்டுள்ளது. 2012 டிசம்பரில் ஆர்ப்பாட்டக் காரர்கள் கொலை செய்யப் பட்டிருந்த குற்றத்துக்காக கடந்த மாதம் ஒரு நீதிமன்றம் மோர்ஸி மீது 20 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

சுமார் ஒரு வருடமே பதவியில் இருந்து 2013 இல் இராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப் பட்ட மோர்ஸி மீதான முதல் இறுதித் தீர்ப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்