உலகம்
Typography

அண்மையில் அமெரிக்க அதிபராகத் தேர்வான டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அதன் பின் சில மணித்தியாலங்களுக்குள் இட்ட உத்தரவின் கீழ் ரஷ்ய விமானங்கள் சிரியாவின் அலெப்போ நகரில் மீண்டும் தாக்குதல் தொடுத்திருப்பதாகத் தெரிய வருகின்றது.

சிரியாவின் வடக்கே கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் அலெப்போவில் 3 வாரங்களுக்குள் நடத்தப் பட்ட முதலாவது விமானத்தாக்குதல் இது என சிரிய எதிரணியினர் அறிவித்துள்ள அதே நேரம் ரஷ்யாவும் செவ்வாழ்க்கிழமை அலெப்போவில் முக்கிய பதிலடித் தாக்குதல் நடாத்தியதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் தொலைபேசியில் உரையாடிய போது ரஷ்யா தனது நம்பர் 1 எதிரியாகவும் சர்வதேச தீவிரவாதம் மற்றும் மிதவாதமாகவும் கருதும் சிரியப் போராளிகளுக்கு எதிராகப் போராடுவதில் இணைந்து செயற்படவுள்ளதை உறுதிப் படுத்தியதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிரியாவில் ISIS இன் பிரசன்னம் இல்லாத ஆனால் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அலெப்போவில் யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வந்து பேச்சுவார்த்தை நடத்துவதெற்கன மாதக் கணக்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் முயன்று வரும் போதும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதேவேளை ரஷ்யாவின் விமானம் தாங்கிக் கப்பலான அட்மிரல் குஷ்நெட்சோ கடந்த மாதம் சிரிய கடற்கரையை அண்மித்து இருந்ததுடன் கிளர்ச்சிப் படை வசமுள்ள இட்லிப் மற்றும் ஹோம்ஸின் மத்திய மாகாணம் ஆகியவற்றைக் குறி வைத்து அக்கப்பலில் இருந்து புறப்படும் விமானங்கள் தாக்குதல் நடத்தும் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது.

இதை விட ரஷ்ய யுத்தக் கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளில் தாக்கியதாக பிரிட்டனை மையமாகக் கொண்டு சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அலெப்போ பகுதிகளில் எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி சுமார் 275 000 பொது மக்கள் குண்டு வீச்சுக்களுக்கு மத்தியில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்