உலகம்
Typography

இவ்வருடம் வெளியிடப்பட்ட உலகின் அதிவேக 500 கணணிகளின் பட்டியலில் சீனாவிலும் அமெரிக்காவிலும் தயாரிக்கப் பட்ட  171 அதிவேக கணணிகள் இடம் பிடித்துள்ளன. மேலும் முதல் 2 சூப்பர் கணணிகளும் சீனாவைச் சேர்ந்தவை என்பதுடன் மொத்தமுள்ள 500 சூப்பர் கணணிகளிலும் 498 கணணிகள் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தொழிற்படுபவன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலிடத்திலுள்ள சீனாவின் சன்வே தைஹுலைட் 93 petaflops வேகத்திலும் 2 ஆவது இடத்திலுள்ள சீனாவின் தியான்ஹே 2, 34 petaflops வேகத்திலும் செயற்பட வல்லன. கடந்த வருடத்தை விட அமெரிக்காவிலுள்ள சூப்பர் கணணிகளின் எண்ணிக்கை இம்முறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன் சீனாவிலுள்ள சூப்பர் கணணிகள் மொத்தம் 167 ஆகவும் அமெரிக்காவினது மொத்தம் 165 ஆகவும் இம்முறை உள்ளன.

இது தவிர ஜேர்மனி 31 உம் ஜப்பான் 27 உம் பிரான்ஸ் 20 உம் பிரிட்டன் 13 உம் என்ற எண்ணிக்கையில் சூப்பர் கணணிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவ்வருடம் அனைத்து சூப்பர் கணணிகளினது மொத்த அதிவேகம் 672 petaflops என்பதுடன் இது கடந்த வருடத்தை விட 60% வீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்