உலகம்
Typography

ஆப்பிரிக்காவின் வறிய நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கில் பெட்ரோல் டேங்கி டிரக் ஒன்று வெடித்துச் சிதறியதில் 73 பேர் பலியானதுடன் 110 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். 

மேற்கு மொசாம்பிக்கிலுள்ள ஒரு கிராமத்தில் குறித்த டேங்கியில் இருந்து பொது மக்கள் பெட்ரோல் எடுத்துக் கொண்டிருக்கும் போது அது வெடித்துச் சிதறியுள்ளது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதுடன் இதில் பல சிறுவர்களும் அடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

 இந்த பெட்ரோல் டேங்கி எண்ணெய் விற்பனைக்காகத் தரித்திருக்கும் போது விபத்து ஏற்பட்டதா அல்லது அபகரிக்கப் பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரிய வரவில்லை. அண்மையில் டாலருக்கு நிகராக மொசாம்பிக் நாணயமான  மெட்டிக்கல்லின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து அந்நாட்டு அரசு அங்கு எரிபொருளின் விலையை அதிகரித்ததால் பொது மக்கள் சிரமத்தைச் சந்தித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்