உலகம்
Typography

நியூயோர்க்கின் மன்ஹட்டானிலுள்ள டிரம்ப் டவரில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்புக்கும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேவுக்கும் இடையே உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் பின் ஊடகங்களுக்குப் பேசிய அபே, டிரம்ப் ஓர் நம்பகத் தன்மை மிக்க தலைவராகத் தென்படுகின்றார் எனவும் இவரது ஆட்சியின் கீழ் இரு நாட்டு உறவு மேலும் வலுப்படும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இச்சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்பதால் 90 நிமிடம் நீடித்த இச்சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களும் பேசிக் கொண்ட விடயங்கள் பற்றிய முழு விபரம் தெரிவிக்கப் படவில்லை.

 முன்னதாக TPP எனப்படும் அமெரிக்கா தலைமையிலான 12 பசுபிக் நாடுகளின் கூட்டமைப்பில் ஒபாமா ஆட்சியின் கீழ் அபே மிகவும் நெருக்கமாகத் தொழிற்பட்டு வந்தார். ஆனால் பதவியேற்கவுள்ள அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்போ தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த TPP அமைப்புக்கு எதிராகவும் ஜப்பான் அணுவாயுதங்களை வாங்குவதற்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS